கன்னத்தில் பளார்னு அறைவிழும்! மேடையில் சில்மிஷம் செய்த கூல் சுரேஷை வெளுத்துவாங்கிய தொகுப்பாளினி ஐஸ்வர்யா
சரக்கு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கூல் சுரேஷ் தன்னிடம் எல்லைமீறி நடந்து கொண்ட விவகாரம் குறித்து தொகுப்பாளினி ஐஸ்வர்யா ரகுபதி முதன்முறையாக பேசி உள்ளார்.
aishwarya Raghupathi, cool suresh
மன்சூர் அலிகான் தயாரிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் சரக்கு. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்றது. அப்போது அந்த விழாவை தொகுத்து வழங்கிய தொகுப்பாளினி ஐஸ்வர்யா ரகுபதிக்கு நடிகர் கூல் சுரேஷ் திடீரென மாலை அணிவித்தார். தொகுப்பாளினியிடம் எல்லைமீறி நடந்துகொண்ட கூல் சுரேஷின் செயலால் கடுப்பான பத்திரிகையாளர்கள் மேடையிலேயே அவரை மன்னிப்பு கேட்க வைத்தனர்.
anchor aishwarya Raghupathi
மன்சூர் அலிகானும் அவருக்காக மன்னிப்பு கேட்டுக்கொண்டார். இருப்பினும் இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்ததை அடுத்து வீடியோ வெளியிட்டு மன்னிப்பு கேட்ட கூல் சுரேஷ், தான் கண்டெண்ட்டுக்காக தான் அப்படி செய்ததாகவும், மற்றபடி எந்தவித தவறான எண்ணமும் இல்லை எனக்கூறி வீடியோ வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில், தன்னிடம் அத்துமீறி நடந்துகொண்ட கூல் சுரேஷுக்கு தக்க பதிலடி கொடுக்கும் விதமாக தொகுப்பாளினி ஐஸ்வர்யா ரகுபதி பேசி இருக்கிறார்.
இதையும் படியுங்கள்... ஷாரூக்கின் ஜவான்.. நயனின் காட்சிகளுக்கு கத்திரி போடப்பட்டதா? - அட்லீ மேல் கடுப்பில் சுத்தும் Lady Super Star!
aishwarya Raghupathi slams cool suresh
சரக்கு பட இசை வெளியீட்டு விழா குறித்து மிகவும் ஆதங்கப்பட்டு பேசியுள்ள ஐஸ்வர்யா ரகுபதி, அந்த சம்பவத்தை நினைத்தால் இப்பவும் ஷாக்கிங்கா தான் இருக்கு. கூல் சுரேஷ் என்னுடைய தோள்பட்டைய பலவந்தமா அமுக்கி மாலையை போட்டார். எல்லார் முன்னாடியும் திடீர்னு இப்படி நடந்துக்கிட்டா நம்ம என்ன செய்ய முடியும். அவரை ஏன் கன்னத்திலேயே பளார்னு அறைவிடலேயேனு இப்ப யோசிக்கிறேன். கிறுக்குத்தனம் பண்ணலாம், ஆனா அது யாரையும் பாதிக்காத மாதிரி பண்ணனும்.
aishwarya Raghupathi sarakku audio launch issue
ஏற்கனவே கூல் சுரேஷுக்கும் எனக்கும் ஒரு விழாவில் பிரச்சனை ஆனது. அவருடைய செயல் எனக்கு எப்பவுமே பிடிக்காது. அதனாலயே அவரை வரவேற்கும் போது, கூல் சுரேஷ்னு மட்டும் தான் சொல்லுவேன். ஒரு தடவ எனக்கு யூடியூப் சூப்பர்ஸ்டார்னு எவ்ளவோ பெயர் இருக்கும்போது, வெறும் கூல் சுரேஷ்னு சொல்றீங்களேனு மேடையிலேயே கேட்டார். அதை மனதில் வைத்துக்கொண்டு தான் இப்படி நடந்துக்கிட்டாரோனு தோணுது. இனி அவர் இப்படி எங்கிட்ட நடந்துகிட்டா, ஒன்னு கன்னத்துல அறைவிழும், இல்ல போலீஸ்ல புகார் கொடுப்பேன்” என ஓப்பனாக சொல்லி உள்ளார் ஐஸ்வர்யா.
இதையும் படியுங்கள்... ஆளு யாருனு அடையாளம் தெரியுதா..? 42 வயதிலும் ஹாட்டான லுக்கில் டக்கர் போஸ் கொடுத்த விக்ரமின் ரீல் நாயகி அனிதா!