- Home
- Gallery
- மும்பையில் காரில் ஊர் சுற்றும் சாரா டெண்டுல்கர் – ஷானீல் கில்; சுப்மன் கில் சாரா லவ் கன்ஃபார்மா?
மும்பையில் காரில் ஊர் சுற்றும் சாரா டெண்டுல்கர் – ஷானீல் கில்; சுப்மன் கில் சாரா லவ் கன்ஃபார்மா?
சாரா டெண்டுல்கர் மற்றும் சுப்மன் கில்லின் சகோதரி ஷானீல் சில் இருவரும் ஒரே காரில் செல்லும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Sara Tendulkar and Shubman Gill Love Story
இந்திய அணியின் இளவரசர் என்று அழைக்கப்படுபவர் சுப்மன் கில். கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் இந்திய அணியில் இடம் பெற்று விளையாடி வருகிறார்.
Sara Tendulkar
18 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய கில் 994 ரன்களும், 44 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய 2271 ரன்களும், 11 டி20 போட்டிகளில் 312 ரன்களும் எடுத்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகபட்சமாக 208 ரன்கள் குவித்துள்ளார். இளம் வயதில் இரட்டை சதம் அடித்தவர்களின் பட்டியலில் கில் இடம் பெற்றுள்ளார்.
Sara Tendulkar
ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார். இவரது தலைமையின் கீழ் குஜராத் டைட்டன்ஸ் எவ்வாறு செயல்படும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
Shahneel Gill
வரும் மார்ச் 22 ஆம் தேதி ஐபிஎல் தொடர் தொடங்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. சுப்மன் கில் மற்றும் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கர் இருவரும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.
Shahneel Gill and Sara Tendulkar
இதற்கு இருவரும் மறுப்பும் தெரிவிக்கவில்லை. உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் கில் ஒவ்வொரு முறையும் பவுண்டரியும், சிக்ஸரும் அடிக்கும் போது கை தட்டி உற்சாகம் செய்தார். மேலும், அரைசதம் அடிக்கும் போதும் எழுந்து நின்று உற்சாகமாக பாராட்டு தெரிவித்து வந்தார். அதுமட்டுமின்றி கில் பேட்டிங் செய்து பவுண்டரி, சிக்ஸர் அடிக்கும் போதெல்லாம் கேமராவில் போகஸ் செய்யப்பட்டார்.
Sara Tendulkar With Shubman Gill Sister Shahneel Gill
அந்தளவிற்கு கில் மற்றும் சாரா இருவருக்கும் இடையிலான காதல் குறித்து செய்தி வெளியாகி வந்தது. இவ்வளவு ஏன், ஜியோ நிகழ்ச்சியில் கில் மற்றும் சாரா டெண்டுல்கர் இருவரும் ஒன்றாக கலந்து கொண்டனர். ஆனால், மீடியோ இருப்பதை அறிந்து கில் சாராவுடன் ஒன்றாக வெளியில் வர மறுப்பு தெரிவித்தார்.
Shubman Gill-Sara Tendulkar
சுப்மன் கில்லின் சகோதரி ஷானீல் கில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரபலமாகி வருகிறார். நிதிஷ் ராணா உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்களுடன் ஷானீல் கில் பதிவிட்ட புகைப்படங்கள் வைரலாகியது.
Sara Tendulkar
இந்த நிலையில் தான் ஷானீல் கில் மற்றும் சாரா டெண்டுல்கர் இருவரும் மும்பையின் பாந்த்ரா பகுதியில் ஒன்றாக காரில் ஊர் சுற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதன் காரணமாக சுப்மன் கில் மற்றும் சாரா டெண்டுல்கர் இருவரும் கூடிய விரைவில் தங்களது காதலை வெளிப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.