- Home
- Gallery
- SK 23 : சிவகார்த்திகேயனை அடிக்க கேஜிஎஃப்-ல் இருந்து ஆள் இறக்கிய முருகதாஸ்... எஸ்.கே.23 படத்தின் வில்லன் இவரா?
SK 23 : சிவகார்த்திகேயனை அடிக்க கேஜிஎஃப்-ல் இருந்து ஆள் இறக்கிய முருகதாஸ்... எஸ்.கே.23 படத்தின் வில்லன் இவரா?
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் எஸ்.கே.23 திரைப்படத்தில் வில்லனாக நடிக்க உள்ள நடிகர் பற்றிய அப்டேட் கசிந்துள்ளது.

Sivakarthikeyan, AR murugadoss
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து தன்னுடைய கடின உழைப்பால் முன்னேறி இன்று மாஸ் நடிகர் லிஸ்ட்டில் இணைந்திருப்பவர் சிவகார்த்திகேயன். அவர் நடிப்பில் தற்போது அமரன் திரைப்படம் உருவாகி உள்ளது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாகவும், சாய் பல்லவி ஹீரோயினாகவும் நடித்துள்ள இப்படம் வருகிற ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் திரைக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது.
SK 23 movie
அமரன் படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் எஸ்.கே.23. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மிணி வஸந்த் என்கிற கன்னட நடிகை நடித்து வருகிறார். அதிரடி ஆக்ஷன் கதையம்சம் கொண்ட படமாக உருவாகி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இதையும் படியுங்கள்... Nayanthara: மலர்களே பொறாமை கொள்ளும் அழகு.! கால் முளைத்த பூவாய் பூந்தோட்டதை ரசிக்கும் நயனின் கியூட் போட்டோஸ்!
SK 23 Update
எஸ்.கே.23 திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக வித்யூத் ஜமால் நடிப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது மேலும் ஒரு மாஸ் வில்லன் இணைந்திருக்கிறார். அவர் தான் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத். விஜய்யின் லியோ படத்துக்கு பின்னர் கோலிவுட்டில் அவர் வில்லனாக ரீ-எண்ட்ரி கொடுக்கும் படம் இதுவாகும். அதுமட்டுமின்றி சிவகார்த்திகேயன் உடன் அவர் நடிக்கும் முதல் படம் இது என்பதால் இருவரது காம்போவை காண ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.
Sanjay Dutt
எஸ்.கே.23 திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் - சஞ்சய் தத் நடிக்கும் ஆக்ஷன் காட்சிகள் தான் தற்போது படமாக்கப்பட்டு வருகின்றன. இப்படத்தை இயக்கி முடித்த கையோடு பாலிவுட்டுக்கு செல்ல உள்ள இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், அங்கு சல்மான் கானை வைத்து சிக்கந்தர் என்கிற திரைப்படத்தை இயக்க உள்ளார். அதில் ராஷ்மிகா மந்தனா, கரீனா கபூர் ஆகியோர் ஹீரோயின்களாக நடிக்க, சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
இதையும் படியுங்கள்... Balu Mahendra : பாலு மகேந்திராவின் பொண்ணா இது... கன்னக்குழி அழகில் கவர்ச்சி தேவதையாய் கவர்ந்திழுக்கும் ஷக்தி!