- Home
- Gallery
- தயவு செஞ்சு ஐட்டம் டான்ஸ் ஆடாத... உறவினர்கள் எதிர்ப்பை மீறி புஷ்பாவில் கவர்ச்சியாக ஆடியது ஏன்? சமந்தா விளக்கம்
தயவு செஞ்சு ஐட்டம் டான்ஸ் ஆடாத... உறவினர்கள் எதிர்ப்பை மீறி புஷ்பாவில் கவர்ச்சியாக ஆடியது ஏன்? சமந்தா விளக்கம்
புஷ்பா படத்தின் முதல் பாகத்தில் ஊ சொல்றியா பாடலுக்கு குடும்பத்தினர் மற்றும் தோழிகள் எதிர்ப்பை மீறி ஐட்டம் டான்ஸ் ஆடியதாக சமந்தா கூறி இருக்கிறார்.

samantha
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட சமந்தா, அவரை கடந்த 2021-ம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார். நாக சைதன்யா உடனான பிரிவுக்கு பின்னர் சினிமாவிலும் படு கவர்ச்சியாக நடிக்க தொடங்கிய சமந்தா, அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த புஷ்பா என்கிற திரைப்படத்தில் ஐட்டம் சாங் ஒன்றிற்கு கவர்ச்சி நடனம் ஆடி இருந்தார்.
Samantha Ruth Prabhu
அப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதற்கு அந்த பாடலும் ஒரு காரணம். ஏனெனில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் கவர்ச்சியாக சமந்தா டான்ஸ் ஆடிய முதல் பாடல் இதுவாகும். இந்த பாடலில் சமந்தாவின் நடனத்தை பார்க்கவே தியேட்டருக்கு படையெடுத்து வந்த ரசிகர்கள் ஏராளம். இந்த பாடலில் நடனமாடியதற்காக நடிகை சமந்தாவுக்கு ரூ.5 கோடி சம்பளமாக வழங்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்தன. இந்த நிலையில், அந்த பாடலில் நடனமாடி குடும்பத்தினர் மற்றும் தோழிகள் எதிர்ப்பு தெரிவித்ததாக சமந்தாவே ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.
இதையும் படியுங்கள்... அன்று பிளாட்பார்மில் தங்கியவர்; இன்று 6300 கோடிக்கு அதிபதி! 9 வருஷமா ஒரு ஹிட் கூட இல்ல; அந்த Superstar யார்?
pushpa movie Samantha
அதில் அவர் கூறியிருப்பதாவது : “புஷ்பா படத்தில் ஆட வாய்ப்பு வந்தபோது நான் விவாகரத்து முடிவில் இருந்தேன். அப்போது என்னிடம் எனது தோழிகளும் சரி, குடும்பத்தினரும் சரி நீ விவாகரத்து முடிவை வேற அறிவிக்க போற, இந்த நேரத்தில் ஐட்டம் டான்ஸ் ஆட வேண்டாம் என சொன்னார்கள். ஆனால் அவர்களின் எதிர்ப்பை மீறி அந்த பாடலில் நடனம் ஆடினேன். அது மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது அனைவரும் அறிந்ததே.
samantha Item Dance
அந்த வாய்ப்பை நிராகரிக்க என்னிடம் காரணமே இல்லை. எதற்காக நான் மறைக்க வேண்டும். நான் எந்த தவறும் செய்யவில்லை. திருமண வாழ்க்கையில் நான் நூறு சதவீதம் உண்மையா இருந்தேன். ஆனால் அது எனக்கு ஒர்க் ஆகவில்லை” என அந்த பேட்டியில் சமந்தா கூறி இருந்தார். அவரின் இந்த பேட்டி தற்போது வைரல் ஆகி வருகிறது. நடிகை சமந்தா நடிப்பில் தற்போது சிட்டாடெல் என்கிற வெப் தொடர் தயாராகி இருக்கிறது. விரைவில் அது ரிலீஸ் ஆக உள்ளது.
இதையும் படியுங்கள்... Jailer 2 : ஜெயிலர் 2-வில் இணையும் ரஜினியின் ஜிகிரி தோஸ்து... அப்போ மாஸ் சம்பவம் உறுதி..!