கிரிஞ் ஆன மனநிலை... மாடலிங் துறையில் சந்தித்த கஷ்டங்கள் என்னென்ன? முதன்முறையாக மனம்திறந்து பேசிய சமந்தா
மாடலிங் துறையில் பணியாற்றியபோது மிகவும் கடினமான காலகட்டமாக இருந்ததாக நடிகை சமந்தா பேட்டி ஒன்றில் மனம்திறந்து பேசி உள்ளார்.
samantha
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. அவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த குஷி திரைப்படம் ஹிட்டானதை அடுத்து, சினிமாவில் இருந்து பிரேக் எடுத்துள்ள சமந்தா, மயோசிடிஸ் சிகிச்சைகளை மேற்கொண்டு வருகிறார். முதலில் அமெரிக்கா சென்று சிகிச்சை எடுத்துக் கொண்ட அவர், தற்போது பூட்டான் சென்றுள்ளார். இந்த நிலையில், நடிகை சமந்தா மாடலிங் துறையில் தான் சந்தித்த கஷ்டங்கள் பற்றி பேசி இருக்கிறார்.
samantha ruth prabhu
அதன்படி அவர் கூறியதாவது : “நான் என் கல்லூரி காலகட்டத்தில் இருந்தே மாடலிங் செய்து வந்தாலும் படிப்பின் மீதும் தொடர்ந்து கவனம் செலுத்தினேன். இந்தியாவில் ஒவ்வொரு குடும்பத்திலும் பெற்றோர்கள் அவர்களது பிள்ளைகளை நன்கு படிக்க வைக்க தான் விரும்புவார்கள். அதனால் நானும் படிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து நன்கு படித்தேன். அது எனக்கு கடினமாக இல்லை.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Samantha Modelling
தேர்வு நாட்களில் காலை 4 மணிக்கெல்லாம் எழுந்து படிக்கும் கேரக்டர் நான். அந்த சமயத்தில் நடிகையாக வேண்டும் என்கிற ஐடியாவே என்னிடம் இல்லை. மாடலிங் துறைக்குள் வந்த பின்னர் தான் நடிக்க வேண்டும் என்கிற எண்ணம் வந்தது. ஏனெனில் அது கடினமான காலமாக இருந்தது. தொடந்து படிக்க முடியவில்லை, வீட்டின் நிலைமையும் சரியில்லை. என்ன செய்வதென்றே தெரியாமல் இருந்தேன்.
Samantha opens up about sruggles
மாடலிங்கில் நுழைந்த பின்னர் தான் ஒரு ஐடியா கிடைத்தது. நடிகையாக வேண்டும் என்பதை இலக்காகவும் வைத்திருந்தேன். மாடலிங் துறையில் நான் எதையும் எடுத்துக்கொள்ள விரும்பவில்லை. அப்படி செய்திருந்தால் நான் பேரழிவை சந்தித்திருப்பேன். நான் மாடலிங்கை தொடங்கும் போது மோசமாக இருந்தேன். டிவியில் நான் நடித்த விளம்பரம் வந்தாலே ஓடிச் சென்று மாற்றிவிடும் அளவுக்கு கிரிஞ் ஆன மனநிலையில் தான் இருந்தேன். ஏனெனில் அது பயமுறுத்தும் விதமாக மிகவும் மோசமாக இருந்தது” என சமந்தா கூறி உள்ளார்.
இதையும் படியுங்கள்... ஜப்பானுக்கு அடித்த ஜாக்பாட்... 6 நாள் சிறப்பு காட்சிகளை திரையிட தமிழக அரசு அனுமதி - FDFS எப்போ தெரியுமா?