நெருங்கும் தீபாவளி... சேலை பிசினஸில் பிசியான சமந்தா! அவங்க கடையில் இந்த சேலை தான் டிரெண்டிங்காம்
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், நடிகை சமந்தா தன்னுடைய சேலை பிசினஸை மார்க்கெட்டிங் செய்யும் வேலைகளில் பிசியாக உள்ளார்.
samantha
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த குஷி திரைப்படம் அமோக வரவேற்பை பெற்று சமந்தாவுக்கு கம்பேக் படமாகவும் அமைந்தது. குஷி படம் ரிலீஸ் ஆனதும் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்த நடிகை சமந்தா அமெரிக்காவுக்கு சென்றார்.
samantha ruth prabhu
மயோசிடிஸ் நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த சமந்தா அதற்காக சிகிச்சை எடுக்க அமெரிக்காவில் சில மாதங்கள் தங்கி இருந்தார். இந்த சிகிச்சைக்காக அவர் புதுப்படங்கள் எதிலும் கமிட் ஆகவில்லை. மயோசிடிஸில் இருந்து முழுமையாக குணமடைந்ததும் சினிமாவில் நடிக்க முடிவெடுத்துள்ளார் சமந்தா.
samantha in saree
அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து மீண்டும் இந்தியாவுக்கு திரும்பிய சமந்தா, தற்போது தன்னுடைய பிசினஸில் முழு கவனம் செலுத்தி வருகிறார். அவர் சாகி என்கிற ஆடை நிறுவனத்தை நடத்தி வருகிறார். அந்நிறுவனத்தின் விளம்பர தூதராகவும் சமந்தா தான் செயல்பட்டு வருகிறார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
samantha diwali saree
தற்போது தீபாவளி சீசன் என்பதால் இதையொட்டி தன்னுடைய சாகி நிறுவனத்தில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள வித விதமான சேலைகளில் போட்டோஷூட் நடத்தி, அதனை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளம்பரம் செய்து வருகிறார் சமந்தா.
samantha saree photos
ஆரம்பத்தில் பட்டுச்சேலைகள் மற்றும் சுடிதார்களை அணிந்து போட்டோஷூட் நடத்தி வந்த சமந்தா, தற்போது பிங்க் நிற சேலையை சரியவிட்டு செக்ஸியாக போட்டோஷூட் ஒன்றை நடத்தி அதன் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
samantha saree business
இதைப்பார்த்த நெட்டிசன்கள் தீபாவளிக்கு இப்படியெல்லாம் டிரெஸ் போட்டா என்ன ஆகுறது என கமெண்ட் செய்து வருகின்றனர். சமந்தாவின் இந்த கவர்ச்சிகரமான சேலை போட்டோஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்.. 200 கோடியில் அரண்மனை போல் வீடுகட்டி ராஜவாழ்க்கை வாழும் ‘பாலிவுட் பாட்ஷா’ ஷாருக்கானின் சொத்து மதிப்பு இவ்வளவா?