MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • ராமராஜனின் சாமானியன் முதல்... ஹிப் ஹாப் ஆதியின் PT சார் படம் வரை! மே 24-ஆம் தேதி வெளியாகும் 6 படங்கள்!

ராமராஜனின் சாமானியன் முதல்... ஹிப் ஹாப் ஆதியின் PT சார் படம் வரை! மே 24-ஆம் தேதி வெளியாகும் 6 படங்கள்!

இந்த வாரம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சந்தானத்தின் 'இங்க நான் தான் கிங்கு', மற்றும் உறியடி விஜயகுமாரின் 'எலக்சன்' போன்ற படங்கள் வெளியான நிலையில், அடுத்த வாரம் வெளியாக உள்ள படங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். 

2 Min read
Author : manimegalai a
Published : May 19 2024, 03:36 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

அதாவது மே-24 ஆம் தேதி திரையரங்குகளை குறிவைத்து 6 படங்கள் வெளியாக உள்ளன. இதில் 10 வருடங்களுக்கு பின்னர் நடிகர் ராமராஜன் ஹீரோவாக நடித்துள்ள சாமானியன் திரைப்படமும் ஒன்று. இப்படத்தின் அணைத்து பணிகளும் கடந்த ஆண்டே முடிவடைந்துவிட்ட நிலையில், ஒருசில பிரச்சனைகள் காரணமாக இப்படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. இந்த படத்தை ஆர் ராஹேஷ் இயக்கி உள்ளார். ராமராஜன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, ராதா ரவி, எம் எஸ் பாஸ்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். திரில்லர் பாணியில் இப்படம் உருவாகியுள்ளது. இந்த படம் 23-ஆம் தேதியே வெளியாக உள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
PT Sir

PT Sir

இந்த படத்தை தொடர்ந்து, 'வீரன்' படத்தை தொடர்ந்து இசையமைப்பாளரும், நடிகருமான ஹிப் ஹாப் தமிழா ஆதி நடித்துள்ள PT சார் படம் மே 24-ஆம் தேதி வெளியாக உள்ளது. கலகலப்பான காதல், காமெடி செண்டிமெண்ட் என அனைத்தும் கலந்த கலவையாக உருவாகியுள்ள இந்த படத்தில், பின் பிள்ளைகள் சந்திக்கும் முக்கிய பிரச்சனை குறித்து பேசப்பட்டுள்ளது. கார்த்திக் வேணுகோபால் இயக்கியுள்ள இந்த படத்திற்கு, ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். இந்த படத்தை ஐசரி கணேஷ் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

செம்ம கியூட்...கமல், விஜய், அஜித் என பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடி போட்ட டாப் ஹீரோயினா இவங்க?
 

35
Furiosa A Mad Max Saga trailer

Furiosa A Mad Max Saga trailer

அதே போல் 6 கண்களும் ஒரே பார்வை என்கிற படமும் அடுத்த வாரம் மே 24-ஆம் தேதியை குறிவைத்து வெளியாகிறது. அறிமுக இயக்குனர் இயக்கியுள்ள இந்த படத்தில் புதுமுகங்கள் நடித்துள்ளனர். அதே போல் Furiosa: A Mad Max Saga படத்தின் தமிழில் டப் செய்யப்பட்டு அன்றைய தினம் வெளியாக உள்ளது.

45

நடிகர் வெற்றி நடித்துள்ள பகலரியான் திரைப்படமும் மே 24-ஆம் தேதி வெளியாக உள்ளது. இதுவரை வெற்றி நடித்த கதாபாத்திரங்களை விட, மிகவும் வித்தியாசமான வேடத்தில் இப்படத்தில் நடித்துளளார். திரில்லர் ஜர்னரில் உருவாகியுள்ள இந்த படத்தை, அறிமுக இயக்குனர் முருகன் இயக்கி உள்ளார். இந்த படத்தில் வெற்றிக்கு ஜோடியாக அக்ஷயா கண்டமுதன் நடித்துள்ளார். 

Vijay Antony: விஜய் ஆண்டனியின் செயல் தான் அவருடைய மகள் மீரா தற்கொலைக்கு காரணம்! பரபரப்பை ஏற்படுத்திய சுசி!
 

55

ஜீசஸ் கிரேஸ் சினி என்டர்டெயின்மென்ட் சார்பில், ஞான ஆரோக்கிய ராஜா தயாரித்து இயக்கியுள்ள திரைப்படம் பூமர காத்து. விதுஷ், சந்தோஷ் சரவணன் ஆகியோர் கதாநாயகர்களாக நடித்துள்ள இந்த படத்தில், கதாநாயகியாக மனிஷா நடித்துள்ளார். இவர்களுடன் மனோபாலா, தேவதர்ஷினி, சிங்கம் புலி, ஓ.எஸ்.மணி, முத்துக்காளை, போண்டாமணி, சிஸ்ஸர் மனோகர், குழந்தை நட்சத்திரம் ஜி.வி.சன்மதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பள்ளி பருவத்தில் வரும் காதல் சரியா? தவறா? என்பதை மையமாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.
 

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved