ஒரு மாசத்துல கல்யாணத்த வச்சுக்கிட்டு இப்படி பண்ணிட்டியே! நெஞ்சில் அடித்து கதறும் பெற்றோர்! நடந்தது என்ன?
சேலம் மாவட்டம் சூரமங்கலத்தில் திருமணத்திற்கு முந்தைய நாள் மணப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருமணத்தில் விருப்பமில்லாததால் கார்த்திகா என்ற இளம்பெண் தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.
Engagement
சேலம் மாவட்டம் சூரமங்கலம் உழவர் சந்தை அருகில் உள்ள சீனிவாசா காலனியை சேர்ந்தவர் தங்கவேல். ஓய்வு பெற்ற அரசு நடத்துனர். இவருக்கு 3 மகள்கள். இவர்களில் மூத்த மகளுக்கு திருமணமாகிவிட்டது. 2-வது மகள் கார்த்திகா, பிஎஸ்சி வேளாண்மை படித்துவிட்டு வேலை தேடி வந்துள்ளார். இளைய மகள் காரைக்குடியில் தங்கி படித்து வருகிறார்.
Wedding invitation
இதனால் வீட்டில் தங்கவேல், அவரது மனைவி மற்றும் 2-வது மகள் ஆகியோர் வசித்து வந்தனர். இந்நிலையில், 2வது மகளுக்கு நிச்சயம் செய்யப்பட்டு அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருந்ததால் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வந்தது. கல்யாண பத்திரிக்கை அச்சடிக்கப்பட்டு உறவினர்களுக்கு வழங்கி வந்தனர்.
Suicide
இந்நிலையில், தங்கவேல் தனது மனைவியுடன் உறவினர்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுக்க வெளியே சென்றுவிட்டு இரவு வீட்டுக்கு வந்து பார்த்த போது மணப்பெண் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருப்பதை பார்த்து பெற்றோர் அழுது கதறினர்.
Police investigation
இதுகுறித்து சூரமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கார்த்திகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் திருமணத்தில் மணப்பெண் கார்த்திகாவிற்கு விருப்பம் இல்லாததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.