MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Mayiladuthurai to Salem Train: சேலம் - மயிலாடுதுறை ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த ரயில்வே நிர்வாகம்!

Mayiladuthurai to Salem Train: சேலம் - மயிலாடுதுறை ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த ரயில்வே நிர்வாகம்!

மயிலாடுதுறையில் இருந்து சேலம் செல்லக்கூடிய பயணிகள் ரயில் திடீரென மெமு ரயிலாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது பயணிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

1 Min read
vinoth kumar
Published : Jun 09 2024, 08:32 AM IST| Updated : Jun 09 2024, 08:35 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
Mayiladuthurai to Salem Train

Mayiladuthurai to Salem Train

மயிலாடுதுறையில் இருந்து திருச்சிக்கு தினசரி காலை 6.20 மணிக்கு பயணிகள் ரயில் பல ஆண்டுகளாக இயக்கப்பட்டு வந்தது. இதனை நீட்டிக்கப்பட்ட வேண்டும் என்ற பயணிகளின் கோரிக்கையை ஏற்று கடந்த ஆண்டு முதல் சேலம் வரை நீட்டிக்கப்பட்டது.  காலை 6.20 மணிக்கு மயிலாடுதுறையில் இருந்து புறப்படும் இந்த ரயில் கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, கரூர், நாமக்கல் மார்க்கமாக மதியம் 1.45 மணிக்கு சேலம் சென்றடைகிறது. தொடர்ந்து மறுமார்க்கமாக சேலத்தில் 2.05 மணிக்கு புறப்பட்டு திருச்சி வழியாக மயிலாடுதுறையை இரவு 9.45 மணிக்கு வந்தடைகிறது.

23
Train Passenger

Train Passenger

முன்பதிவு இல்லாத இந்த ரயிலில் பள்ளி - கல்லூரி மாணவர்கள், வேலைக்குச் செல்வோர்கள் அதிக அளவில் பயணித்து வருகின்றனர். இந்நிலையில், பயணிகள் கூட்டம் அதிகரித்து வருவதால்  12 பெட்டிகளுடன் இயங்கிய ரயிலை கூடுதல் பெட்டிகளுடன் இணைத்து 16 பெட்டிகளாக இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இதுகுறித்து ரயில்வே நிர்வாகத்திடம் மனுவும் அளித்தனர்.

இதையும் படிங்க: Southern Railway: பொதுமக்களுக்கு தெற்கு ரயில்வே வெளியிட்ட குட்நியூஸ்..!

33
MEMU Train

MEMU Train

இந்நிலையில் 12 பெட்டிகளுடன் இயங்கிய இந்த ரயிலை 8 பெட்டிகள் மட்டுமே கொண்ட மெமு ரயிலாக ரயில்வே நிர்வாகம் மாற்றி  இருப்பது பொதுமக்கள் மற்றும் ரயில் பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ரயில் எந்த ஊருக்கு செல்கிறது என்ற பெயர் பலகை வைக்கப்படாததால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.  ரயிலை கூடுதல் பெட்டிகளுடன் இணைத்து பழையபடியே இயக்கவில்லை என்றால் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்துள்ளனர்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சேலம்
தென்னக இரயில்வே

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved