- Home
- Gallery
- வளர்ப்பு மகனால் வந்த பிரச்சனை... ஜெயம் ரவி விவாகரத்து விவகாரத்தில் புது குண்டை தூக்கிப் போட்ட பிரபலம்..!
வளர்ப்பு மகனால் வந்த பிரச்சனை... ஜெயம் ரவி விவாகரத்து விவகாரத்தில் புது குண்டை தூக்கிப் போட்ட பிரபலம்..!
ஜெயம் ரவி அவரது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்ய உள்ளதாக சர்ச்சை வெடித்துள்ள நிலையில், அதுகுறித்து பத்திரிகையாளர் சபிதா ஜோசப் பரபரப்பு விவரங்களை வெளியிட்டுள்ளார்.

Jayam Ravi and Aarti
நடிகர் ஜெயம் ரவி கடந்த 2009-ம் ஆண்டு ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஜெயம் ரவி மனைவி ஆர்த்தியும் சினிமா குடும்பத்தை சேர்ந்தவர் தான். அவரது தாயார் சுஜாதா சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார். அந்நிறுவனம் மூலம் ஏராளமான படங்களையும் அவர் தயாரித்து உள்ளார். குறிப்பாக ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த பூமி, சைரன் போன்ற திரைப்படங்களை அவர் தான் தயாரித்து இருந்தார்.
Jayam Ravi Wife Aarti
ஜெயம் ரவிக்கும் அவரது மனைவி ஆர்த்திக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் ஆரவ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். சக்தி செளந்திரராஜன் இயக்கத்தில் வெளிவந்த டிக் டிக் டிக் திரைப்படத்தில் நடிகர் ஜெயம் ரவியின் மகனாகவே நடித்திருந்தார் ஆரவ். அப்படம் வெற்றிபெற்றதோடு, ஆரவ்வின் நடிப்பை பாராட்டி அவருக்கு விருதுகளும் வழங்கப்பட்டன. அதன் பின்னர் எந்த படத்திலும் ஆரவ் நடிக்கவில்லை.
இதையும் படியுங்கள்... இன்று ரூ.150 கோடி சம்பளம்.. பான் இந்தியா ஸ்டார் பிரபாஸ் தனது முதல் படத்திற்கு வாங்கிய சம்பளம் எவ்வளவு?
Jeyam ravi & aarti divorce issue
சினிமாவில் டாப் கியரில் சென்று கொண்டிருக்கும் நடிகர் ஜெயம் ரவி தான் தற்போது கோலிவுட்டில் ஹாட் டாப்பிக்காக உள்ளார். காரணம் அவரும் அவரின் மனைவி ஆர்த்தியும் விவாகரத்து செய்து பிரிய முடிவெடுத்துள்ளதாக பரவும் தகவல் சோசியல் மீடியாவிலும் பேசு பொருள் ஆகி உள்ளது. ஜெயம் ரவியின் அடுத்த படத்தை அவரது மாமியார் சுஜாதா தயாரிக்க முன்வந்தபோது அவரிடம் ஜெயம் ரவி ரூ.25 கோடி சம்பளமாக கேட்டதாகவும், அதை சுஜாதா தர மறுத்ததால் ஆர்த்தி உடன் சண்டை ஏற்பட்டு அவர்கள் பிரிய முடிவெடுத்துவிட்டதாக பேச்சு அடிபடுகிறது.
Sabitha josepth says about Jayam ravi - Aarti Split
இது ஒருபுறம் இருக்க பத்திரிகையாளர் சபிதா ஜோசப் பகீர் காரணம் ஒன்றை கூறி இருக்கிறார். அது என்னவென்றால், சுஜாதாவிற்கு சங்கர் என்கிற வளர்ப்பு மகன் ஒருவர் உள்ளாராம். அவர் தான் சுஜாதா நடத்தி வரும் தயாரிப்பு நிறுவனத்தின் பணிகளை மேற்கொண்டு வருகிறாராம். சங்கர் சொல்வதை ரவி கேட்க வேண்டும் என சுஜாதா ஆர்டர் போட்டதால் அவர்களிடையே மோதல் ஆரம்பித்திருக்கிறது. பின்னர் அது ஈகோ மோதலாக மாறி, மனைவி ஆர்த்தியிடம் அந்த கோபத்தை ஜெயம் ரவி காட்டியதால் தான் தற்போது விவாகரத்தில் வந்து நிற்கிறது என சபிதா ஜோசப் கூறி உள்ளார்.
இதையும் படியுங்கள்... 'கல்வி விருது விழா' தளபதியின் மாஸ் என்ட்ரி முதல்.. வைர மோதிரம் - ஊக்கத்தொகை வழங்கியது வரை! வைரல் போட்டோஸ்!