விரைவில் டும் டும் டும்.. தயாராகிவிட்டாரா நாக சைதன்யா? தீயாக பரவும் செய்தி - ஆமா சமந்தா ரியாக்சன் என்ன?
பிரபல தெலுங்கு திரைப்பட நடிகர் நாகார்ஜுனாவின் மகன் தான் பிரபல நடிகர் நாக சைதன்யா, இவருக்கும் பிரபல நடிகை சமந்தாவிற்கும் கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் நடந்து முடிந்தது.
Samantha
கடந்த 2009 ஆம் ஆண்டு தெலுங்கில் திரை உலகில் வெளியான ஜோஸ் என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கு திரை உலகில் அறிமுகமானவர்தான் நாக சைதன்யா. தமிழில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா என்ற திரைப்படத்தில் இவர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Samantha and Naga
விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில், சைதன்யாவின் ஜோடியாக நடித்து, திரை உலகில் களமிறங்கியவர் தான் பிரபல நடிகை சமந்தா. அந்த திரைப்படம் தான் இவர்களுடைய காதல் துளிர்விட காரணமாக இருந்தது என்றால் அது சற்றும் மிகையல்ல.
Samantha and Naga Divorce
சுமார் 5 ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வந்த சமந்தா மற்றும் நாக சைதன்யா ஆகிய இருவரும், கடந்த 2017 ஆம் ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் அதன் பிறகு அவர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் கடந்த 2021ம் ஆண்டு பிரிந்தது குறிப்பிடத்தக்கது.
Sobhita
இந்த சூழல் நடிகர் நாக சைதன்யா, பிரபல நடிகை சோபிதா துலிபாவுடன் காதல் வயப்பட்டுள்ளதாகவும், தன்னுடைய புது வீட்டிற்கு அவரை அழைத்து தனது பெற்றோரிடம் அவரை அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் சில தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் இந்த தகவலை நாக சைதன்யாவும், அவருடைய குடும்பத்தாரும் மறுத்துள்ள நிலையில், இந்த செய்தி தற்பொழுது தெலுங்கு திரை உலகை தீயாக பரவி வருகிறது. மேலும் இது பற்றி கேள்விப்பட்ட சமந்தா, அவரை பிரிந்துவிட்ட காரணத்தினால் அதை பெரிய அளவில் பொறுப்பெடுத்த வில்லை என்று கூறப்படுகிறது.