சல்மானும் இல்ல.. கமலும் இல்ல - டாப் தமிழ் நடிகரை வைத்து வேற ஸ்கெட்ச் போடும் அட்லீ!
Atlee Kumar : இதுவரை பிளாப் படங்களே கொடுக்காத, வெகு சில கோலிவுட் இயக்குனர்களில் ஒருவர் தான் அட்லீ குமார்.

jawan
தமிழில், தளபதி விஜயை வைத்து தொடர்ந்து 3 ஹிட் படங்களை கொடுத்தார் இயக்குனர் அட்லீ. இந்த சூழலில் அவருக்கு அடித்த மெகா ஜாக்பாட் தான் பாலிவுட் பாஷா ஷாருக்கானை இயக்கும் வாய்ப்பு. கடந்த 2023ம் ஆண்டு, ஷாருக்கான் தயாரித்து நடித்த, அட்லீயின் "ஜவான்" திரைப்படம், உலக அளவில் சுமார் 1140 கோடி வசூல் வேட்டை நடத்தியது.
salman
ஓவர் நைட்டில் பாலிவுட் உலகின் செல்லப்பிள்ளையாக மாறிய அட்லீ, அம்பானி வீட்டு விசேஷத்தை எடுத்து நடத்தும் அளவிற்கு வெய்ட்டு கையாக மாறினார். பாலிவுட் பிரபலங்கள் அவரை கொண்டாட துவங்கிய நிலையில், 58 வயதிலும் சிங்கிளாக ராஜநடை போடும் சல்மானை, அட்லீ இயக்கவுள்ளதாக காட்டுத்தீ போல செய்திகள் பரவியது.
Kamal
ஆனால் அந்த காட்டுத்தீ போன்ற செய்தி அடங்குவதற்குள், சல்மானின் அந்த படத்தில், உலக நாயகன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் பரவியது. சல்மான் ஒருபக்கம், கமல் ஒருபக்கம், அட்லீக்கு சம்பளம் 80 கோடி என்று, நித்தம் ஒரு செய்தி வந்துகொண்டே இருந்தது. ஆனால் இதற்கு நேர்மாறாக இப்பொது புதிய தகவல் ஒன்று வலம்வர துவங்கியுள்ளது.
suriya
அது தான் நம்ம கங்குவாவை வைத்து அட்லீ செய்யவுள்ள சம்பவம். ஆம் விரைவில் Bollywoodல் களமிறங்கவுள்ள நடிகர் சூர்யாவை வைத்து தான் தனது அடுத்த பட பிளானை போடவுள்ளாராம் அட்லீ. அந்த படத்தை Sun Pictures தயாரிக்கவுள்ளது என்றும், ராக் ஸ்டார் அணி தான் இசையமைக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
என்ன நண்பா ரெடியா? அடுத்த அப்டேட் கொடுக்க தயாரான வெங்கட் பிரபு - என்ன அது?