ஷாக்கிங் நியூஸ்! ரவுடி அக்கவுண்டில் ஒரே மாதத்தில் ரூ.2.50 கோடி டெபாசிட்.. அதிர்ச்சியில் போலீஸ்!
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரவுடி அசோக்குமாரின் வங்கிக் கணக்கில் ஒரே மாதத்தில் ரூ.2.50 கோடி டெபாசிட் செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வங்கி நிர்வாகத்தின் புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவான அசோக்குமாரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
Cuddalore Rowdy
கடலூர் மாவட்டம் பேர்பெரியான்குப்பத்தை சேர்ந்த பெருமாள் மகன் அசோக்குமார்(25). இவர் மீது காவல் நிலையத்தில் கொலை, அடிதடி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. இவருக்கு முத்தாண்டிகுப்பம் பகுதியில் உள்ள கனரா வங்கியில் சேமிப்பு கணக்கை வைத்துள்ளார். இவரது வங்கி கணக்கில் கடந்த ஜூலை மாதம் ரூ.10 லட்சம், ரூ.20 லட்சம் என பல்வேறு தவணையாக ஒரே மாதத்தில் 2.50 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டது.
Canara Bank
இதுதொடர்பாக வங்கி அதிகாரிகள் கேட்ட போது முன்னுக்கு பின் முரணாக அசோக்குமார் பதிலளித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த கனரா வங்கி சார்பில் முத்தாண்டிகுப்பம் காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
Police Investigation
இதனையடுத்து போலீசார் அறிவுறுத்தலின் பேரில் ரவுடி அசோக் குமாரின் வங்கி கணக்கை கனரா வங்கி முடக்கி உள்ளது. இதுகுறித்து அறிந்ததும் அசோக்குமார் தனது வங்கிக் கணக்கில் இருந்த 2 கோடி ரூபாய் பணத்தை 7 பேருக்கு அனுப்பியுள்ளார். அவர்கள் யார் யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Rowdy Absconding
மேலும் தலைமறைவாக உள்ள ரவுடி அசோக்குமாரை தீவிரமாக தேடி வருகின்றனர். கடலூரில் ரவுடி வங்கிக் கணக்கில் ஒரே மாதத்தில் ரூ. 2.50 கோடி பணம் டெபாசிட் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.