- Home
- Gallery
- முதல் நாளில் அதிக வசூல் அள்ளிய டாப் 10 மூவீஸ் ... ரஜினி, அஜித் லிஸ்ட்லயே இல்ல; தனி ஒருவனாக மாஸ் காட்டும் விஜய்
முதல் நாளில் அதிக வசூல் அள்ளிய டாப் 10 மூவீஸ் ... ரஜினி, அஜித் லிஸ்ட்லயே இல்ல; தனி ஒருவனாக மாஸ் காட்டும் விஜய்
இந்திய சினிமா வரலாற்றில் முதல் நாளில் உலகளவில் அதிக வசூல் அள்ளிய டாப் 10 இந்திய படங்களின் பட்டியலை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

pathaan
பதான்
சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோனே நடிப்பில் கடந்த ஆண்டு திரைக்கு வந்த படம் பதான். இப்படம் முதல் நாளில் உலகளவில் ரூ.106 கோடி வசூலை வாரிக்குவித்து 10வது இடத்தில் உள்ளது.
Animal
அனிமல்
பாலிவுட்டில் நடிகர் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் கடந்த ஆண்டு ரிலீஸ் ஆன திரைப்படம் அனிமல். இப்படத்தை சந்தீப் ரெட்டி வங்கா இயக்கி இருந்தார். இப்படம் முதல் நாளில் ரூ.115.9 கோடி வசூலித்து 9ம் இடம் பிடித்திருக்கிறது.
Jawan
ஜவான்
கோலிவுட்டில் மாஸ் இயக்குனராக வலம் வந்த அட்லீ, பாலிவுட்டில் இயக்குனராக அறிமுகமான படம் ஜவான். ஷாருக்கான் ஹீரோவாக நடித்த இப்படம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரிலீஸ் ஆகி முதல் நாளில் ரூ.129 கோடி வசூலித்தது. இப்படம் 8ம் இடத்தில் உள்ளது.
Saaho
சாஹோ
பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர் பிரபாஸ் ஹீரோவாக நடித்த படம் சாஹோ. இப்படம் பிளாப் ஆனாலும் அந்த சமயத்தில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்ததால் முதல் நாளில் ரூ.130 கோடி வசூலித்து இருந்தது. இப்படம் 7வது இடம் பிடித்துள்ளது.
Leo
லியோ
முதல் நாளில் அதிக வசூல் அள்ளிய இந்திய படங்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ள ஒரே ஒரு தமிழ் படம் என்றால் அது தளபதி விஜய் நடித்த லியோ திரைப்படம் தான். 6ம் இடத்தில் உள்ள இப்படம் முதல் நாளில் ரூ.142.75 கோடி வசூலித்து இருந்தது.
இதையும் படியுங்கள்... ஒரே நாளில் 200 கோடியை நெருங்கிய வசூல்... KGF, Leo பட சாதனை முறியடித்து பாக்ஸ் ஆபிஸை பதம் பார்த்த கல்கி 2898AD
Salaar
சலார்
பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ், பிருத்விராஜ் சுகுமாரன் நடிப்பில் பான் இந்தியா படமாக வெளிவந்த சலார் திரைப்படம் முதல் நாளில் ரூ.158 கோடி வசூலித்து 5ம் இடம் பிடித்திருக்கிறது.
KGF 2
கே.ஜி.எப் 2
நடிகர் யாஷ், ராக்கு பாய் எனும் மாஸ் கேரக்டரில் நடித்த திரைப்படம் தான் கே.ஜி.எப் 2. கடந்த 2022-ம் ஆண்டு திரைக்கு வந்த இப்படம் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸில் ரூ.159 கோடி வசூலித்து 4ம் இடத்தை தட்டிச் சென்றுள்ளது.
Kalki 2898AD
கல்கி 2898AD
முதல் நாளில் அதிக வசூல் அள்ளிய இந்திய படங்களின் பட்டியலில் 3ம் இடம் பிரபாஸின் கல்கி 2898AD திரைப்படத்துக்கு கிடைத்துள்ளது. இப்படம் முதல் நாளில் ரூ.180 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
Baahubali 2
பாகுபலி 2
இந்திய சினிமாவையே பிரம்மிக்க வைத்த படம் என்றால் அது பாகுபலி. ராஜமவுலி இயக்கிய இப்படத்தின் இரண்டாம் பாகம் முதல் நாளில் ரூ.217 கோடி வசூலித்து அதிக வசூல் அள்ளிய படங்கள் பட்டியலில் 2ம் இடம் பிடித்துள்ளது.
RRR
ஆர்.ஆர்.ஆர்
முதல் நாளில் அதிக வசூல் அள்ளிய இந்திய படங்களின் பட்டியலில் முதல் இடத்தை தட்டிச் சென்றுள்ள திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளிவந்த இப்படம் முதல் நாளில் ரூ.223 கோடி வசூலித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... Kanguva Movie : "தலைவரோடு" நேருக்கு நேர் மோதும் சூர்யா.. உச்சகட்ட குஷியில் Fans - "கங்குவா" ரிலீஸ் தேதி இதோ!