- Home
- Gallery
- Rajamouli: RRR 2 பாகம் எப்போது வரும்..? ஹீரோக்களின் கேள்விக்கு குட்நியூஸ் சொன்ன ராஜமெளலி..!
Rajamouli: RRR 2 பாகம் எப்போது வரும்..? ஹீரோக்களின் கேள்விக்கு குட்நியூஸ் சொன்ன ராஜமெளலி..!
Rajamouli: RRR 2 படத்தின் பார்ட் -2 வேண்டும் என்று படத்தின் வெற்றி விழாவில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் ராஜமௌலியிடம் கேட்டுள்ளனர்.

RRR Movie
எஸ்எஸ் ராஜமௌலியின் மார்ச் 24 இல் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம், 12 நாட்களின் உலகம் முழுவதும் 1000 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
RRR Movie
எஸ்.எஸ். ராஜமௌலி பாகுபலி, மாவீரம், பாகுபலி 2 படங்களின் வெற்றியை தொடர்ந்து இந்திய சினிமாவின் முக்கிய இயக்குனராக வலம் வருகிறார்.
RRR Movie
ராஜமௌலி, இயக்கத்தில் தெலுங்கில் இரு பெரும் நடிகர்களான ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோரின் நடிப்பில் கடந்த மார்ச் 24 ம் தேதி பான் இந்தியா திரைப்படமாக ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் வெளிவந்து, ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்று வருகிறது.
RRR Movie
'ஆர்.ஆர்.ஆர்' திரைப்படத்தை ரூ. 500 கோடி மெகா பட்ஜெட்டில் 3டி தொழில்நுட்பத்தில் பிரம்மாண்டத்திற்கு கொஞ்சமும் பஞ்சம் இல்லாமல் ராஜமௌலி உருவாக்கியுள்ளார்.
RRR Movie
ஆலியா பட், அஜய் தேவ்கன், ஒலிவியா மாரிஸ், சமுத்திரக்கனி என பல்வேறு நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்த திரைப்படத்தை தெலுங்கு திரையுலகமே கொண்டாடி வருகிறது.
RRR Movie
இதையடுத்து படத்தின் வசூலும் தாறுமாறாக உயர்ந்து வருகிறது. மற்ற படங்களின் ரிலீசையும் தாண்டி இந்தப் படம் வசூல் புதிய சாதனை புரிந்து வருகிறது.
RRR Movie
இந்த படம் வெளியான வெறும் 12 நாட்களின் உலகம் முழுவதும் 1000 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
RRR Movie
இந்நிலையில் படத்தின் வெற்றி விழா நேற்று ஹிந்தியில் நடைபெற்றது. அதில் படக்குழுவினர் மற்றும் அமீர் கான், கரண் ஜோகர், ஜாவித் அக்தர் உள்ளிட்ட சில முன்னணி நட்சத்திரங்களும் கலந்துகொண்டனர்.
RRR Movie
அப்போது, நிகச்சியில் கலந்து கொண்ட ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் RRR 2 படத்தின் பார்ட் -2 வேண்டும் என்று ராஜமௌலியிடம் கேட்டுக்கொண்டனர்.
RRR Movie
இதற்கு பதில் சொன்ன, ராஜமௌலி எனக்கும் எடுக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. அது பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூல் ஈட்டும் என்பதால் அல்ல, என் தம்பிகள் உங்கள் உடன் அதிக நேரம் செலவிடலாம் என்பதால் தான். ஆனால், அதற்கான நேரம் வரட்டும் என்று பதில் அளித்தார்.