மோசமான ஃபார்மை வெளிப்படுத்திய ரோகித் சர்மா – ரசிகர்கள் அன்ஹேப்பி!
வங்கதேச அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பை வார்ம் அப் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

India vs Bangladesh, 15th Match, T20 World Cup Warm Up Match
டி20 உலகக் கோப்பை தொடரில் இடம் பெற்ற ஒவ்வொரு அணியும் வார்ம் அப் போட்டிகளில் விளையாடி வருகின்றன. அந்த வகையில் கடைசி வார்ம் அப் போட்டியில் இந்தியா, வங்கதேச அணியை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.
Rohit Sharma, Rohit Sharma Fan
இந்திய அணியில் விராட் கோலி மட்டும் வார்ம் அப் போட்டியில் பங்கேற்கவில்லை. மற்ற 14 வீரர்கள் வார்ம் அப் போட்டியில் இடம் பெற்றனர். ரோகித் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் இருவரும் தொடக்க வீர்ரகளாக களமிறங்கினர். இதில், சஞ்சு சாம்சன்1 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார்.
Rohit Sharma
இதே போன்று கேப்டன் ரோகித் சர்மா 23 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதன் மூலமாக ரோகித் சர்மா தனது மோசமான ஃபார்மை வெளிப்படுத்தியுள்ளார். ஐபிஎல் தொடர் மூலமாக இதே போன்று மோசமான ஃபார்மை ரோகித் சர்மா வெளிப்படுத்தி வருவதால் ரசிகர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
IND vs BAN Warm Up Match
இதே நிலையில் ரோகித் சர்மா விளையாடினால் தனது கேப்டன்ஷிப்பை இழக்க நேரிடும். அதோடு, இந்திய அணியிலிருந்தும் சற்று ஓய்வு எடுக்கும் நிலையும் உண்டாகும். இது வார்ம் அப் போட்டி என்பதால் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், முக்கியமான போட்டிகளில் இது போன்று அவர் விளையாடினால் டிராபியை இழக்க நேரிடும்.