- Home
- Gallery
- டி20 உலகக் கோப்பை டிராபியை வென்று கொடுத்த ரோகித் சர்மா – டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பை டிராபியை வென்று கொடுத்த ரோகித் சர்மா – டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு!
விராட் கோலியைத் தொடர்ந்து டி20 உலகக் கோப்பை டிராபியை வென்று கொடுத்த கேப்டன் ரோகித் சர்மாவும் சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

Rohit Sharma T20I Retirement
தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பை 2024 இறுதிப் போட்டியில் இந்தியா 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 17 ஆண்டுகளுக்கு பிறகு 2ஆவது முறையாக டிராபி வென்று சாம்பியனானது.
IND vs SA Final, T20 World Cup 2024
ஒருநாள் உலகக் கோப்பயை இழந்த ரோகித் சர்மா முதல் முறையாக டி20 உலகக் கோப்பையை இந்திய அணிக்காகவும், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிற்காகவும் வென்று கொடுத்துள்ளார்.
South Africa vs India, Final
அதன் பிறகு கொஞ்ச நேரத்திலேயே விராட் கோலி சர்வதேச டி20 கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இது தான் தனது கடைசி டி20 உலகக் கோப்பை என்றார். விராட் கோலியைத் தொடர்ந்து சிறிது நேரம் மகிழ்ச்சி மற்றும் கொண்டாட்டத்திற்கு பிறகு ரோகித் சர்மாவும் டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
Virat Kohli T20I Retirement
முதல் முறையாக எம்.எஸ்.தோனி தலைமையிலான இந்திய அணியானது 2007 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரை வென்றது. இதைத் தொடர்ந்து 17 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது 2ஆவது முறையாக டி20 உலகக் கோப்பை டிராபியை வென்றது.
IND vs SA Final, T20 World Cup 2024
பார்படாஸில் நடைபெற்ற இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் குவித்தது. இதில், விராட் கோலி அதிகபட்சமாக 76 ரன்கள் குவித்தார்.
Virat and Rohit Sharma Retirement
பின்னர் கடின இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்கா அணிக்கு குயீண்டன் டி காக் மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஓரளவு நல்ல ஸ்கோர் எடுத்துக் கொடுத்தனர். ரீஸா ஹெண்ட்ரிஸ் மற்றும் கேப்டன் எய்டன் மார்க்ரம் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். பின்னர் வந்த ஹென்ரிச் கிளாசென் அதிரடியாக விளையாடினார்.
South Africa vs India, Final
அவர், விளையாடியதைப் பார்த்தால் தென் ஆப்பிரிக்கா எளிய வெற்றியை பெற்றுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. கடைசியில் ஹர்திக் பாண்டியா கிளாசெனின் விக்கெட்டை எடுத்துக் கொடுத்து திருப்பு முனையை ஏற்படுத்தினார். கிளாசென் 23 பந்துகளில் அரைசதம் அடித்த நிலையில் 5 சிக்ஸர், ஒரு பவுண்டரி உள்பட 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
T20 World Cup Champion
அப்போது தென் ஆப்பிரிக்கா 16.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. கடைசியில் 23 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தால் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றுவிடும். ஆனால், பும்ரா 17.4ஆவது ஓவரில் மார்கோ யான்செனின் விக்கெட்டை எடுத்துக் கொடுத்தார். அந்த ஓவரில் பும்ரா 2 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார்.
South Africa vs India, Final
அர்ஷ்தீப் சிங் 19ஆவது ஓவரை வீசினார். அந்த ஓவரில் வெறும் 4 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார். கடைசி ஓவரை ஹர்திக் பாண்டியா வீசினார். ஆனால், டேவிட் மில்லர் களத்தில் இருந்தார். அந்த ஓவரில் தென் ஆப்பிரிக்காவிற்கு 16 ரன்கள் தேவைப்பட்டது. முதல் பந்தை சிக்ஸருக்கு முயற்சித்தார். ஆனால், பவுண்டரி லைனில் பீல்டிங்கில் நின்றிருந்த சூர்யகுமார் யாதவ் அந்த கேட்சை பிடிக்கவே போட்டியில் திருப்பு முனை ஏற்பட்டது.
Rohit Sharma With His Wife
அதன் பிறகு 2ஆவது பந்தில் ரபாடா பவுண்டரி விளாசினார். 3ஆவது மற்றும் 4ஆவது பந்தில் ஒரு ரன் எடுக்கப்படவே, 5ஆவது பந்தில் ரபாடா ஆட்டமிழந்தார். கடைசி பந்தில் ஒரு ரன் எடுக்கப்பட்டது. இதன் மூலமாக அந்த ஓவரில் 8 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டது. இறுதியாக தென் ஆப்பிரிக்கா 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்கள் எடுத்து 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
Rahul Dravid
இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக இந்திய அணியானது இந்த தொடரில் விளையாடிய 8 போட்டியிலும் வெற்றி பெற்று சாதனை படைத்தது. அதோடு 2ஆவது முறையாக உலகக் கோப்பை டிராபியை வென்றது.
Rahul Dravid, South Africa vs India, Final
இதைத் தொடர்ந்து விராட் கோலி டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இவரைத் தொடர்ந்து ரோகித் சர்மாவும் டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற ரோகித் சர்மா இந்த முடிவை அறிவித்துள்ளார்.
Rohit Sharma, Hardik pandya
இதுவரையில் 159 டி20 போட்டிகளில் விளையாடிய ரோகித் சர்மா 4231 ரன்கள் குவித்துள்ளார். இதில், 5 சதங்களும், 20 அரைசதங்களும் அடங்கும். அதிகபட்சமாக 121 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. டி20 கிரிக்கெட்டில் ஓய்வு அறிவித்துள்ள ரோகித் சர்மா டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
South Africa vs India, Final
டி20 உலகக் கோப்பை டிராபியை வென்ற மகிழ்ச்சியில் ரசிகர்கள் இருக்கும் போது விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் அடுத்தடுத்து ஓய்வு முடிவை அறிவித்தது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.