- Home
- Gallery
- 28 ஆண்டுகளுக்கு பின் ரீரிலீஸ் ஆன இந்தியன்! தீவிர ரசிகனாக வந்து கமல் பேனருக்கு பாலாபிஷேகம் செய்த பிரபல நடிகர்
28 ஆண்டுகளுக்கு பின் ரீரிலீஸ் ஆன இந்தியன்! தீவிர ரசிகனாக வந்து கமல் பேனருக்கு பாலாபிஷேகம் செய்த பிரபல நடிகர்
கமல்ஹாசனின் இந்தியன் திரைப்படம் 28 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆகி உள்ள நிலையில், ரசிகர்கள் உற்சாகத்துடன் பார்த்து மகிழ்ந்தனர்.

Indian Movie
கமல்ஹாசன் - ஷங்கர் கூட்டணியில் கடந்த 1996-ம் ஆண்டு ரிலீஸ் ஆகி மாஸ் ஹிட் அடித்த திரைப்படம் தான் இந்தியன். இதில் தந்தை, மகன் என இரட்டை வேடத்தில் நடித்திருந்தார் கமல்ஹாசன். கமலின் கெரியரில் ஒரு மாஸ்டர் பீஸ் படமாக இந்தியன் அமைந்திருந்தது. அப்படம் வெளியாகி 28 ஆண்டுகளுக்கு பின்னர் அதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி இருக்கிறது. இப்படத்தை லைகா நிறுவனமும், ரெட் ஜெயண்ட் நிறுவனமும் தயாரித்து இருக்கிறது.
Indian 2
இந்தியன் 2 திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். அண்மையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதில் ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டனர். ஆனால் ஏ.ஆர்.ரகுமான் இந்தியன் முதல் பாகத்திற்கு போட்ட இசை அளவிற்கு அனிருத்தின் பாடல்கள் இல்லை என்கிற விமர்சனங்களும் எழுந்துள்ளன. படம் ரிலீஸ் ஆன பின்னர் இதுகுறித்த விவாதம் மேலும் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.
இதையும் படியுங்கள்... Weapon Review : சத்யராஜ் நடித்த வெப்பன் திரைப்படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ
Indian Re Release
இந்தியன் 2 திரைப்படம் வருகிற ஜூலை மாதம் 13-ந் தேதி திரைக்கு வர உள்ளது. இதுதவிர இந்தியன் படத்தின் மூன்றாம் பாகமும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் திரைக்கு வர உள்ளது. இதற்கான ஷூட்டிங்கையும் எடுத்து முடித்துவிட்டாராம் ஷங்கர். இப்படி இந்தியன் 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கும் நிலையில், இந்தியன் முதல் பாகத்தை தற்போது திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்துள்ளனர்.
Robo Shankar
அதன்படி இன்று உலகமெங்கும் ரீ-ரிலீஸ் ஆகி இருக்கும் இந்தியன் திரைப்படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு அளித்து வருகின்றனர். நடிகரும் கமல்ஹாசனின் தீவிர ரசிகருமான ரோபோ சங்கர், இந்தியன் படம் ரீ-ரிலீஸ் ஆனதை கொண்டாடும் விதமாக சென்னையில் உள்ள கமலா திரையிரங்கில் ரசிகரோடு ரசிகராக படம் பார்க்க வந்த அவர், அங்கு பிரம்மாண்ட கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்து கமல் மீதான தன் பக்தியை வெளிப்படுத்தி இருக்கிறார்.
இதையும் படியுங்கள்... வீட்டில் செல்ல நாய்க்கு உணவளிக்கும் விஜய்.. ட்ரெண்டான வீடியோ.. குஷியில் ரசிகர்கள்..