- Home
- Gallery
- விராட் கோலியை ஒவர்டேக் செய்த ரிஷப் – 5 ஆண்டுகால கோலியின் சாதனையை ஒரு நொடியில் முறியடித்த பண்ட்!
விராட் கோலியை ஒவர்டேக் செய்த ரிஷப் – 5 ஆண்டுகால கோலியின் சாதனையை ஒரு நொடியில் முறியடித்த பண்ட்!
பாகிஸ்தானுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை தொடரில் விராட் கோலியின் சாதனையை ஒரே நொடியில் ரிஷப் பண்ட் முறியடித்துள்ளார்.

India vs Pakistan, T20 World Cup 2024
கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் டி20 உலகக் கோப்பை தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதில் முதல் சீசனில் தோனி தலைமையிலான இந்திய அணியானது டிராபியை கைப்பற்றியது. இந்த தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ராபின் உத்தப்பா அதிக ரன்கள் குவித்தார். அவர் 39 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்ஸர் உள்பட 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
India vs Pakistan, T20 World Cup 2024
இந்தப் போட்டி டிராவில் முடிந்த நிலையில் பவுல் அவுட் முறையில் இந்தியா வெற்றி பெற்றது. இறுதிப் போட்டியில் கௌதம் காம்பீர் 54 பந்துகளில் 8 பவுண்டரி, 2 சிக்ஸர் உள்பட 75 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் விராட் கோலி 61 பந்துகளில் 8 பவுண்டரி, 2 சிக்ஸர் உள்பட 78 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
India vs Pakistan, T20 World Cup 2024
இதே போன்று 2014 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரில் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 2016 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 2021 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரில் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கடந்த 2022 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரில் விராட் கோலி 53 பந்துகளில் 6 பவுண்டரி, 4 சிக்ஸர் உள்பட 82 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
India vs Pakistan, T20 World Cup 2024
இந்த நிலையில் தான் 2024ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விராட் கோலி 4 ரன்களில் ஆட்டமிழக்கவே, ரிஷப் பண்ட் அதிகபட்சமாக 31 பந்துகளில் 6 பவுண்டரி உள்பட 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலமாக பாகிஸ்தானுக்கு எதிராக தொடர்ந்து 5 ஆண்டுகளாக விராட் கோலி படைத்து வந்த சாதனையை ரிஷப் பண்ட் முறியடித்துள்ளார்.