ஆம்ஸ்ட்ராங் கொலைக்காக கருவருக்க காத்திருந்த ரவுடி! உளவுத்துறை வார்னிங்கால் சிக்கினார்! யார் இந்த முருகேசன்?
ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழிக்கு பழியாக கொலை நடைபெறலாம் என உளவுத்துறை எச்சரிக்கையை அடுத்து சென்னையில் ரவுடி முருகேசனை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Armstrong Murder News
கடந்த ஜூலை மாதம் 5ம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னை பெரம்பூரில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, வழக்கறிஞர்கள் அருள், ஹரிஹரன், வேலூர் சிறையில் இருக்கும் பிரபல தாதா நாகேந்திரன் மற்றும் அவரது மகன் உள்ளிட்ட 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக இந்த வழக்கில் திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் என முக்கிய பிரமுகர்களும் அடங்குவர். இதில், திருவேங்கடம் என்பவர் மட்டும் என்கவுண்டர் செய்யப்பட்டார்.
Armstrong Murder Case
மேலும் ஆம்ஸ்ட்ராங் வழக்கு தொடர்பாக பாஜக வழக்கறிஞரும், வடசென்னை மக்களவை தொகுதியில் போட்டியிட்ட பால் கனகராஜிக்கு செம்பியம் போலீசார் சம்மன் அனுப்பியதை அடுத்து ஆகஸ்ட் 9ம் தேதி 7 மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட ரவுடிகள் நாகேந்திரன், சம்போ செந்தில் உள்ளிட்டோருக்கு வழக்கறிஞராக செயல்பட்டதால் ஏதாவது தகவல் கிடைக்குமோ என்ற அடிப்படையில் பால் கனகராஜூக்கு சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
Armstrong
இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழிக்குப்பழியாக கொலை நடைபெறலாம் என உளவுத் துறை எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் ரவுடி முருகேசனை காவல்துறையினர் இன்று செய்துள்ளனர். ஆம்ஸ்ட்ராங்கிற்கு மிகவும் நெருக்கமானவராக அறியப்படும் ரவுடி முருகேசன் மீது பல்வேறு கொலை வழக்குகள் உள்ளது.
இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! யாரெல்லாம் பின்னணியில்? 7 மணிநேர விசாரணையில் நடந்தது என்ன?பால் கனகராஜ் பரபரப்பு தகவல்
Armstrong
திமுக பிரமுகர் மடிப்பாக்கம் செல்வம் மற்றும் செங்குன்றம் அதிமுக பிரமுகர் பார்த்திபன் கொலை வழக்கில் சிறையில் சென்று ஜாமீனில் வெளியே வந்து தலைமறைவாக இருந்த ரவுடி முருகேசன் கைது செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில் என்கவுன்டர் செய்யப்பட்ட முத்துசரவணனின் கூட்டாளி முருகேசன் என்பது குறிப்பிடத்தக்கது.