- Home
- Gallery
- உங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க படுக்கைக்கு செல்லும் முன் 'இதை' கண்டிப்பா செய்ங்க..
உங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க படுக்கைக்கு செல்லும் முன் 'இதை' கண்டிப்பா செய்ங்க..
படுக்கைக்கு செல்வதற்கு முன் இதை செய்தால் உங்கள் திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியாக வைத்திருக்க முடியும். அவை..

பரபரப்பான இந்த நாட்களில் நாம் வாழ்ந்து கொண்டிருப்பதால், ஒருவர் தனது துணையிட நேரத்தை செலவிட முடியாமல் போகின்றது. எனவே, நீங்கள் உங்கள் துணையுடன் நேரத்தை செலவிட விரும்பினால் தூங்க செல்வதற்கு முன் சில எளிய குறிப்புகள் பின்பற்றுங்கள். அவை நிச்சயம் உங்களுக்கு உதவும்.
வேலையை மறந்து விடு: படுக்கையில் இருக்கும் போது உங்கள் சகாக்கள் என்ன செய்கிறார்கள் அல்லது அடுத்த நாள் என்ன செய்வ வேலை செய்ய வேண்டும் என்பதை நினைப்பதே முதலில் நிறுத்துங்கள். அதற்கு பதிலாக உங்கள் துணையுடன் தரமான நேரத்தில் செலவிடுங்கள்.
மொபைல் போனை யூஸ் பண்ணாதீங்க: இரவில் அதிக வெளிச்சம் படுவது தூக்கமின்மை ஏற்படுத்துவதோடு, மெலடோனின் என்ற தூக்க ஹார்மோனின் வெளியீட்டையும் கட்டுப்படுத்துகிறது. எனவே, படுகைக்கு செல்லும் போது தொலைபேசியை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.
வாக்குவாதம் வேண்டாம்: பெரும்பாலான உறவுகளில் சில சிறிய நட்பு வாதங்கள் இயல்பானவை என்றாலும், அதிகபடியான வாதங்கள் ஒருபோதும் நல்லதல்ல. குறிப்பாக, படுக்கையில் சண்டையிடுவது பிரச்சனைகளை ஒருபோதும் தீர்க்காது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
மசாஜ்: மசாஜ்கள் வலிகளை குறைக்கின்றது, பதற்றத்தை குறைக்கின்றது மற்றும் மனச்சோர்வின் அளவையும் குறிக்கின்றது.
குட் நைட் முத்தம்: படுக்கைக்கு முன் எந்த வகையான தொடுதலும், அதாவது, முத்தமிடுவது அல்லது அரவணைப்பது தம்பதிகளுக்கு இடையே அவசியமானதாக இருக்க வேண்டும். இது நேர்மறையான உணர்ச்சிகளை தூண்டும் ஒரு நிதானமான நடைமுறையாகும்.
குழந்தைகளிடம் விலகி இருங்கள்: உங்கள் குழந்தைகளை உங்களுடன் தூங்க வைப்பது ஆறுதலாக இருந்தாலும், உங்கள் தூங்கும் இடத்தை தினமும் அவர்களுடன் பகிர்ந்து கொள்வது தம்பதிகளுக்கு நல்லதல்ல என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
இதையும் படிங்க: Relationship Tips : செக்ஸ் வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்க சூப்பரான 3 ஐடியாக்கள் இதோ!
ஒன்றாக தூங்குவது: ஒரே மாதிரியான தூக்கம் முறைகளைக் கொண்ட தம்பதிகள் சிறந்த துக்கத்தை பெற முடியும் மற்றும் நெருங்கிய உறவையும் கொண்டிருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது.
இதையும் படிங்க: Relationship Tips : உறவில் விரிசல் வருவதற்கு 'இந்த' எதிர்பார்ப்புகளே காரணம்.. இனி இந்த தப்ப செய்யாதீங்க!
நெருக்கம்: மேலே சொல்லப்பட்ட போன்ற சிறிய பழக்கங்கள் தம்பதிகள் இடையே நெருக்கத்தை அதிகரிக்கும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D