லியோ எங்களுக்கு வேண்டவே வேண்டாம் என விலகிய ரெட் ஜெயண்ட்ஸ்... தமிழக ரிலீஸ் உரிமையை கைப்பற்றியது யார் தெரியுமா?
விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் லியோ படத்தின் ரிலீஸ் உரிமையை கைப்பற்றும் போட்டியில் இருந்து ரெட் ஜெயண்ட்ஸ் விலகி உள்ளதாக கூறப்படுகிறது.
vijay, udhayanidhi Stalin
நடிகர் விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள திரைப்படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய்யுடன் திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், கவுதம் மேனன், மேத்யூ தாமஸ், சாண்டி மாஸ்டர், பிரியா ஆனந்த், அனுராக் கஷ்யப், பிக்பாஸ் ஜனனி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. லியோ திரைப்படம் வருகிற அக்டோபர் 19-ந் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.
Red giant movies
லியோ படத்தின் ரிலீசுக்கு இன்னும் ஒரு வாரமே எஞ்சி உள்ளதால் அப்படத்தில் புரமோஷன் பணிகள் மற்றும் ரிலீஸ் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. லியோ படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை கைப்பற்ற ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் ஆர்வம் காட்டி வந்ததாக கூறப்பட்டது. லியோ ஆடியோ லாஞ்ச் கேன்சல் ஆனதற்கு கூட ரெட் ஜெயண்ட் தான் காரணம் என பேச்சு அடிபட்டது. தங்களுக்கு குறிப்பிட்ட ஏரியாக்களின் ரிலீஸ் உரிமையை தராவிட்டால் அனுமதி தர முடியாது என ரெட் ஜெயண்ட் தரப்பில் கறார் காட்டியதாலே லியோ ஆடியோ லாஞ்ச் ரத்தானதாக பரவலாக பேசப்பட்டது. பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் கூட இதுபற்றி எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருந்தார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Vijay, Lalit Kumar
இப்படி ரெட் ஜெயண்ட் பற்றி தொடர்ந்து பல்வேறு கருத்துக்கள் பரவி வருவதால், அந்நிறுவனம் ஒரு முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி லியோ படத்தின் ரிலீஸ் உரிமையை கைப்பற்றும் முடிவில் இருந்து ரெட் ஜெயண்ட் பின்வாங்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அப்படத்தை தமிழகம் முழுவதும் செவன் ஸ்கிரீன் நிறுவனமே வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. அந்நிறுவனம் தான் இதற்கு முன்னர் விஜய்யின் மாஸ்டர், வாரிசு போன்ற படங்களை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
Leo movie posters
லியோ படத்திற்கு அதிகாலை காட்சிக்கு அனுமதி கிடைக்காததால், அப்படத்தின் ப்ரீமியர் காட்சியை திரையிடவும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். அதன்படி வருகிற அக்டோபர் 18-ந் தேதி மாலையே லியோ திரைப்படம் ரிலீஸ் ஆக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இது உறுதியானால் ப்ரீமியர் காட்சியோடு ரிலீஸ் ஆகும் முதல் தமிழ் படம் என்கிற பெருமையை லியோ பெறும். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்... லண்டன் நகர பேருந்துகளில் மாசாக வலம் வரும் லியோ.. வேற லெவல் ப்ரோமோஷனில் இறங்கிய படக்குழு - வைரல் வீடியோ!