- Home
- Gallery
- அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் பரிசு.. பட்ஜெட்டில் வரப்போகும் சர்ப்ரைஸ்.. குட் நியூஸ் இதோ!
அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் பரிசு.. பட்ஜெட்டில் வரப்போகும் சர்ப்ரைஸ்.. குட் நியூஸ் இதோ!
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2024-25ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை ஜூலை 23ம் தேதி தாக்கல் செய்ய உள்ளார்.எனவே, பட்ஜெட்டுக்கு முன்பாக பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் வருகின்றன. இந்த பட்ஜெட்டில் மத்திய அரசு ஊழியர்களுக்கான குட் நியூஸ் வரப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

8th Pay Commission Update
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2024-25ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை ஜூலை 23ம் தேதி தாக்கல் செய்ய உள்ளார். இந்த நிலையில் மத்திய அரசு ஊழியர் சங்கமும் பல கோரிக்கைகள் அடங்கிய கருத்துருவை அமைச்சரவை செயலாளருக்கு அனுப்பியுள்ளது. ஊழியர்களின் அனைத்து கோரிக்கைகளிலும், 8வது ஊதியக் குழு அமைப்பது மிக முக்கியமான கோரிக்கைகளில் ஒன்றாகும்.
Budget 2024
2024 பட்ஜெட்டுக்கு முன் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் தொழிலாளர் கூட்டமைப்பு பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளது. இது தவிர, 8வது ஊதியக் குழுவை அமைப்பதற்கான பரிந்துரையும் அரசுக்கு அளிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்த மோடி அரசு, பட்ஜெட்டில் எட்டாவது ஊதியக் குழுவை அமைக்கலாம். அரசு ஊழியர்களுக்கு இந்த பட்ஜெட் நல்ல செய்தியை தரக்கூடும்.
7th Pay Commission
2024ஆம் ஆண்டுக்கான முழு பட்ஜெட்டுக்கு முன்பாக எட்டாவது ஊதியக் குழுவை அமைக்க மத்திய அரசு முன்மொழிந்துள்ளது. 8வது ஊதியக் குழுவுக்கான முன்மொழிவு மோடி அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. எனவே, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அடிப்படை ஊதியம், அலவன்ஸ்கள், ஓய்வூதியம் மற்றும் பிற சலுகைகளை ஊதியக் குழு மறுஆய்வு செய்யலாம்.
DA Hike
8வது ஊதியக் குழுவை அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி, மத்திய அரசு ஊழியர்களுக்கான தேசிய கவுன்சில், மத்திய அரசு ஊழியர்களுக்கான கூட்டு ஆலோசனை இயந்திரங்களின் செயலர் ஷிவ் கோபால் மிஸ்ரா, அமைச்சரவை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார். 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மத்திய ஊதியக் குழு அமைக்கப்படுகிறது. இது மத்திய அரசு ஊழியர்களின் தற்போதைய சம்பள அமைப்பு, அலவன்ஸ் மற்றும் சலுகைகளை சரிபார்த்து, பணவீக்கம் போன்ற புள்ளிகளின் அடிப்படையில் தேவையான மாற்றங்களை பரிந்துரைக்கிறது.
Dearness Allowance
7வது ஊதியக் குழுவை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் 28 பிப்ரவரி 2014 அன்று கொண்டு வந்தார். அதன் பரிந்துரைகள் 1 ஜனவரி 2016 முதல் அமலுக்கு வந்தன. மோடி அரசின் ஆட்சிக் காலத்தில் புதிய ஊதியக் குழு அமைக்கப்படுவது இதுவே முதல் முறை. வழக்கமான பத்தாண்டு கால இடைவெளியின்படி, 8வது மத்திய ஊதியக் குழு 2026 ஜனவரி 1 முதல் தொடங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அதன் முறையான உருவாக்கத்தை அரசாங்கம் இன்னும் அறிவிக்கவில்லை.