Walking Benefits : முதுகு வலிக்கு குட்பை சொல்ல நேரம் வந்தாச்சு! எப்படி தெரியுமா..?
வழக்கமான நடை பயிற்சி முதுகு வலியை பெருமளவும் குறைக்கும் என்று அண்மையில் நடந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

நடைப்பயிற்சி பல வழிகளில் நம் ஆரோக்கியத்திற்கு நன்மைகளை வாரி வழங்குகிறது. நடப்பயிற்சி உடலை சுறுசுறுப்பாக வைப்பது மட்டுமின்றி, உடலில் ஏற்படும் பல நோய்களின் அபாயத்தை குறைக்க பெரிதும் உதவுகிறது.
சாப்பிட்ட பிறகு சிறிது நேரம் நடப்பது நல்லது என்று நிபுணர்கள் சொல்லி இருக்கிறார்கள். ஆனால், வழக்கமான நடைபயிற்சியும் முதுகு வலியை குறைக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? அண்மையில் வெளிவந்த ஆய்வு ஒன்றில் வழக்கமான நடை பயிற்சி செய்வதன் மூலம் முதுகல்வலியை பெருமளவும் குறைக்க முடியும். இது குறித்து விரிவாக இந்த கட்டுரையில் அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.
நிபுணர்கள் நடத்திய ஆய்வில், மொத்தம் 700 பேர் பங்கேற்றனர். அவர்களுக்கு முதுகு வலி பெரும் அளவு குணமாகி இருப்பது தெரியவந்தது. அதுமட்டுமின்றி, கீழ் முதுகு வலியால் அவதிப்படுபவர்கள் தங்கள் வழக்கமான உடற்பயிற்சியில் நடைபயிற்சி சேர்த்துக் கொள்ளலாம்.
இதுகுறித்து ஆஸ்திரேலியாவில் உள்ள, மவ்வேறு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கூற்றுப்படி, நடைபயிற்சி என்பது மிகவும் பொதுவான உடற்பயிற்சியாகும். அதை யார் வேண்டுமானாலும் செய்யலாம். இந்த குறுகிய மற்றும் எளிய பயிற்சிகளை செய்வதன் மூலம் உங்கள் முதுகு வலியை எளிதில் குணப்படுத்தலாம்.
இதையும் படிங்க: சாதாரண வலி தானே என்று அசால்டா இருக்காதீங்க.. தீவிர நோய்க்கு அறிகுறி..!!
ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, வழக்கமான நடைபயிற்சி உடலில் எண்டோர்பின்களை வெளியிடுகிறது அதாவது, மகிழ்ச்சியான ஹார்மோன்கள். இது மனநிலையை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், உங்கள் முதுகில் வலியையும் குறைக்கும்.
இதையும் படிங்க: மூட்டு கை கால் முதுகு இடுப்பு வலி அனைத்தும் நொடியில் காணாமல் போக வேண்டுமா?
நடைப்பயிற்சி உடலில் இயக்கத்தை ஏற்படுத்துகிறது. இது முழுகெலும்பு நல்ல விளைவைக் கொண்டிருக்கிறது. மேலும், இது முதுகு வலியிலிருந்து நிறைய நிவாரணம் அளிக்கிறது.
வழக்கமான நடைப்பயிற்சி பிற நன்மைகள்:
இது உடல் வலிமை அதிகரிப்பதோடு பலவீன மற்றும் சோர்வையும் குறைக்கிறது.
நடைப்பயிற்சி இன்சுலின் அளவை மேம்படுத்துகிறது. இதை நீரிழிவு அபாயத்தை குறைக்கிறது.
நடைப்பயிற்சி உடல் எடையை குறைக்க உதவுகிறது மற்றும் இரத்த அழுத்தத்தில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D