- Home
- Gallery
- ஒப்பற்ற தெய்வம் அம்மா.. கேக் வெட்டி அன்னைக்கு வாழ்த்து.. புகழ் வீட்டில் நடந்த பர்த்டே பார்ட்டி - கூல் பிக்ஸ்!
ஒப்பற்ற தெய்வம் அம்மா.. கேக் வெட்டி அன்னைக்கு வாழ்த்து.. புகழ் வீட்டில் நடந்த பர்த்டே பார்ட்டி - கூல் பிக்ஸ்!
Actor Pugazh : பிரபல சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நடிகர் பபுகழ், தனது அன்னையின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.

pugazh
கடலூரில் பிறந்து, சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்கள் மூலம் தனது கலை உலக பயணத்தை தொடங்கிய நடிகர் தான் புகழ், அவருக்கு வயது 34.
pugazh mom
சின்னத்திரை ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் சிறு சிறு வேடமிட்டு நடித்து வந்த புகழ், "குக் வித் கோமாளி" என்கின்ற நிகழ்ச்சியின் மூலம் தமிழ் மக்கள் நெஞ்சில் நீங்காத இடம் பிடித்தார் என்று கூறினால் அது மிகையல்ல.
mom brithday
அதன் பிறகு கடந்த 2019ம் ஆண்டு "சிக்ஸர்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் வெள்ளித் திரையில் இவருக்கு முதல் வாய்ப்பு கிடைத்தது. தொடர்ச்சியாக "காக்டெயில்", "சபாபதி", "என்ன சொல்ல போகிறாய்" மற்றும் தல அஜித்தின் "வலிமை" என்று தொடர்ச்சியாக பல திரைப்படங்களில் நடிக்க தொடங்கி, இன்று முன்னணி நடிகராகவும் மாறியிருக்கிறார்.
pugazh mom brithday
இந்நிலையில் பிரபல நடிகர் புகழ், தனது தாயின் பிறந்த நாளை விமர்சையாக கொண்டாடும் வகையில், தனது வீட்டிலேயே அவருக்கு கேக் வெட்டி மகிழ்ந்துள்ளார். அன்னை மற்றும் தந்தையின் காலில் விழுந்து ஆசிர்வாதமும் பெற்றுக் கொண்டார் நடிகர் புகழ்.