38 வயதிலும்.. சும்மா நச்சுனு இருக்கும் நயன்தாரா! ஸ்டைலில் ஹாலிவுட்டுக்கே டஃப் கொடுக்கும் லேடி சூப்பர் ஸ்டார்!
நடிகை நயன்தாரா Elle மேகசீனின் அட்டை படத்திற்கு, விதவிதமான கவர்ச்சி உடையில்... வெரைட்டியான போஸ் கொடுத்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
Nayanthara Movies:
தமிழில் 'ஐயா' படம் மூலம் தன்னுடைய கேரியரை துவங்கிய நயன்தாரா, அடுத்தடுத்து ரஜினிகாந்த், விஜய், அஜித், உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். தமிழில் மட்டும் இன்றி, தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் இவருக்கு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது.
Lady Super star Nayanthara
ஒரு கட்டத்திற்கு மேல், ஹீரோக்களுக்கு ஜோடிபோட்டு நடிக்கும் சராசரியான ஹீரோயின்களை போல் அல்லாமல், ஹீரோக்களுக்கு நிகராக... கதாநாயகியை மையப்படுத்தி எடுக்கப்படும் படங்களை தேர்வு செய்து நடித்தார். அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியான ஐரா, கோலமாவு கோகிலா, நெற்றிக்கண், அறம், கனெக்ட், ஓ2 போன்ற படங்கள் வெளியானது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
20 Years of Heroine:
தென்னிந்திய திரையுலகில் சுமார் 20 வருடங்களுக்கு மேலாக, ஹீரோயினாகவே நடித்து வரும் நயன்தாரா, சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லாத நடிகை என கூறலாம். சிம்பு, பிரபு தேவா, போன்ற பிரபலங்களை காதலித்து தோல்வியடைந்தார். இதை தொடர்ந்து தான் விக்னேஷ் சிவனை காதலிக்க துவங்கினார். இருவரும் சுமார் 6 வருடங்களுக்கு மேல் ஒருவரை ஒருவர் உருகி காதலித்த நிலையில் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
Successful Business woman Nayanthara:
திருமணமான 4 மாதத்தில் வாடகை தாய் மூலம் நயன்தாராஇரட்டை குழந்தைகளை பெற்று கொண்டு, ஒரு பொறுப்பான அம்மாவாகவும், காதல் கணவருக்கு மனைவியாகவும் உள்ளதை தாண்டி நடிப்பு, பிஸ்னஸ் என பல விஷயங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
Jawan Movie:
சமீபத்தில் கூட இயக்குனர் அட்லீ இயக்கத்தில் வெளியான, 'ஜவான்' படம் மூலம் தன்னுடைய பாலிவுட் பட பிரவேசத்தையும் துவங்கினார் நயன். முதல் பாலிவுட் படத்திலேயே ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்து, வடஇந்திய ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள நயன்தாராவை, அடுத்தடுத்த படங்களிலும் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
Elle Magazine Photos:
இந்நிலையில், நயன்தாரா தற்போது Elle என்கிற மெகசீனுக்கு, போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். விதவிதமான உடையில்... ஹாலிவுட் ஹீரோயின்களுக்கே டப் கொடுக்கும் கவர்ச்சியில் இருக்கும் நயன்தாராவின் புகைப்படங்கள் தற்போது, லைக்குகளை குவித்து வருகிறது.