Rasi Palan : எந்த ராசி எந்த ராசிக்காரர்களை திருமணம் செய்தால் சிறந்த ஜோடி..?!
Best Couple Zodiac Signs For Happy Marriage Life : ஜோதிட சாஸ்திரத்தில் எந்த ராசிக்கு எந்த ராசி ஏற்றத் துணை என்று சொல்லப்பட்டுள்ளது. அவர்கள் திருமணம் செய்து கொண்டால் அவர்கள் வாழ்க்கை சூப்பராக இருக்கும். இதைப்பற்றி தெரிந்து கொள்ளலாம்.

திருமணம் என்பது அனைவரது வாழ்க்கையிலும் நடக்கும் ஒரு அழகான நிகழ்வு. ஆனால், நீங்கள் சரியான துணையை தேர்ந்தெடுத்தால் மட்டுமே உங்களது வாழ்க்கை வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருக்கும். இல்லையெனில், மோசமாகும்.
ஜோதிட சாஸ்திரத்தின் படி, சில ராசிகள், சில ராசிகளுக்கு சரியான பொருத்தம் என்று சொல்லப்பட்டுள்ளது. எனவே, இந்த கட்டுரையில் எந்த ராசிக்கு எந்த ராசி சரியான ஜோடி என்று பார்க்கலாம்.
மேஷம் துலாம்: மேஷ ராசிக்காரர்கள் ஆற்றல் மிக்கவர்கள் மற்றும் எந்த பணியிலும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள ஆர்வமாக இருப்பார்கள். துலாம் ராசிக்காரர்கள் மிகவும் அமைதியான அணுகுமுறையை கொண்டவர்கள். இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு திருமணம் செய்தால் அவர்களது திருமண வாழ்க்கை நிச்சயம் மகிழ்ச்சியாக இருக்கும்.
ரிஷபம் கன்னி: இவர்கள் இருவரும் இணைந்தால் அவர்களது திருமண வாழ்வில் உறுதியும், நம்பிக்கையும் பசுமையாக இருக்கும். ரிஷபம் தங்கள் துணையை மிகவும் அக்கறையாக கவனித்துக் கொள்வார்கள். மேலும் அவர்களுக்கு விசுவாசமாக இருப்பார்கள். கன்னி, திருமண வாழ்க்கை எவ்வாறு நடைமுறையில் நடத்துவது என்பதை அறிந்து கொள்வார்கள் எனவே இவர்கள் இருவரும் திருமண வாழ்வில் இணைந்தால் நிச்சயம் அந்த திருமண வாழ்க்கை நீண்ட காலம் நீடிக்கும்.
இதையும் படிங்க: Rasi Palan : பொய் சொல்வதில் இந்த 3 ராசிக்கு கைவந்த கலை..இவங்கள அடிச்சிக்க யாருமே இல்ல.. யார் யார் தெரியுமா..?
மிதுனம் மற்றும் கும்பம்: மிதுனம் எப்போதும் ஆர்வமாக இருப்பார்கள் தனது மனைவிடம் பேச விரும்புவார்கள். கும்பம், எல்லாவற்றிலும் சுதந்திரமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்க விரும்புவார்கள். எனவே, இவர்கள் இருவரும் இணைந்தால் சிறந்த ஜோடிகளாக தோன்றுவார்கள்.
இதையும் படிங்க: Rasi Palan : நீங்கள் கல்யாணம் பண்ணா இந்த 3 ராசிக்காரங்கள மட்டும் பண்ணாதீங்க.. விவாகரத்து கன்பார்ம்..!
கடகம் மற்றும் விருச்சகம்: கடகம் மற்றவர்களை பற்றி அதிகம் கவலைப்படுவார்கள். மிதுனம் மிகவும் தீவிரமானவர்கள் மற்றும் தங்கள் சொந்த லட்சியங்களை கொண்டவர்கள். இவர்கள் இருவரும் உணர்ச்சி குணங்கள் ஒன்றுக்கொன்று இணக்கமானவை மற்றும் உணர்ச்சிகளுக்கு வரும் போது இருவரும் சமமானவர்கள். எனவே, இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டால் நிச்சயம் நம்பிக்கைக்கு குறைவில்லை.
சிம்மம் மற்றும் தனுசு: சிம்ம ராசிக்காரர்கள் ரொம்பவே தைரியமானவர்கள் மற்றும் நம்பிக்கையும் அதிகம் கொண்டவர்கள். தனுசு ராசிக்காரர்கள் வாய்ப்புகளை பயன்படுத்தி அதை சாகசமாக நிறைவேற்றும் குணம் உள்ளவர்கள். இவர்கள் இருவரும் ஒன்றிணைந்தால் சரியான ஜோடி என்று ஜோதிடம் கூறுகிறது.
கன்னி மற்றும் மகரம்: இவர்கள் இருவரும் வாழ்வில் பெரிய அளவில், எல்லை தாண்டி சாதிக்க வேண்டும் என்று ஆசைப்படும் மனோ பாவம் கொண்டவர்கள். இவர்கள் இருவருமே சரியான ஜோடி.