- Home
- Gallery
- Rashmika Mandanna : வெள்ளை நிற சேலையில் வெண்ணிலவை போல ஜொலிக்கும் ராஷ்மிகா மந்தனாவின் கார்ஜியஸ் கிளிக்ஸ் இதோ
Rashmika Mandanna : வெள்ளை நிற சேலையில் வெண்ணிலவை போல ஜொலிக்கும் ராஷ்மிகா மந்தனாவின் கார்ஜியஸ் கிளிக்ஸ் இதோ
வெள்ளை நிற சேலை அணிந்தபடி பட விழாவில் கலந்துகொண்ட நடிகை ராஷ்மிகா மந்தனாவின் கலக்கலான புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

rashmika
கன்னடத்தில் வெளிவந்த கிரிக் பார்ட்டி படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. ரிஷப் ஷெட்டி இயக்கிய இப்படம் வெற்றிபெற்றதை தொடர்ந்து அப்படத்தில் ஹீரோவாக நடித்த ரக்ஷித் ஷெட்டியை காதலித்தார் ராஷ்மிகா. இவர்கள் இருவரும் நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்தது.
rashmika mandanna
ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்ததால் ராஷ்மிகா - ரக்ஷித் ஷெட்டி திருமணம் பாதியிலேயே நின்றது. அதன்பின்னர் தெலுங்கு திரையுலகம் பக்கம் தாவிய ராஷ்மிகா, அங்கு விஜய் தேவரகொண்டா, மகேஷ் பாபு போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பேமஸ் ஆனார்.
Pan India Actress rashmika mandanna
அதன்பின்னர் கோலிவுட் பக்கம் வந்த ராஷ்மிகா, தமிழில் கார்த்தி நடிப்பில் வெளிவந்த சுல்தான் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இதையடுத்து வம்சி இயக்கிய வாரிசு திரைப்படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்தார் ராஷ்மிகா. தற்போது இவர் நடிப்பில் தமிழில் ரெயின்போ திரைப்படம் உருவாகி வருகிறது.
இதையும் படியுங்கள்...கருடன் முதல் உப்பு புளி காரம் வரை... இந்த வாரம் தியேட்டர் & ஓடிடியில் இத்தனை படங்கள் ரிலீஸா? முழு லிஸ்ட் இதோ
rashmika mandanna Movies
இதுதவிர இந்தியிலும் செம்ம பிசியான ஹீரோயினாக வலம் வரும் ராஷ்மிகா, தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாக உள்ள சிக்கந்தர் திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு ஜோடியாக நடிக்க கமிட்டாகி இருக்கிறார். இதுதவிர விக்கி கெளசல் உடன் ஒரு வரலாற்று கதையம்சம் கொண்ட படமும் அவர் கைவசம் உள்ளது.
rashmika mandanna photos
மேலும் தெலுங்கு சுகுமார் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் புஷ்பா 2 திரைப்படத்தில் அல்லு அர்ஜுன் ஜோடியாக நடித்து வருகிறார் ராஷ்மிகா. இத்துடன் தனுஷுக்கு ஜோடியாக குபேரா என்கிற பான் இந்தியா படமும் நடிகை ராஷ்மிகா மந்தனா கைவசம் உள்ளது. இப்படத்தை சேகர் கம்முலா இயக்குகிறார்.
rashmika mandanna Latest saree photos
இப்படி பிசியாக ஹீரோயினாக வலம் வரும் ராஷ்மிகா, அண்மையில் ஐதராபாத்தில் நடைபெற்ற கம் கம் கணேஷ் என்கிற படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது வெள்ளை நிற சேலை அணிந்து தேவதை போல் வந்திருந்தா ராஷ்மிகா. அந்நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்து உள்ளன.
இதையும் படியுங்கள்...Vanangaan : இந்தியன் 2-வுக்கு போட்டியாக வணங்கான்... ஷங்கருக்கு ஷாக் கொடுக்க தயாராகிறாரா பாலா?