- Home
- Gallery
- ஆனந்த் ராதிகா திருமணம்.. நம்ம "நேஷனல் க்ரஷ்" கட்டியிருந்த சேலை 1.28 லட்சமா? அதுல அப்படி என்னப்பா இருக்கு?
ஆனந்த் ராதிகா திருமணம்.. நம்ம "நேஷனல் க்ரஷ்" கட்டியிருந்த சேலை 1.28 லட்சமா? அதுல அப்படி என்னப்பா இருக்கு?
Actress Rashmika Mandanna : நடிகை ராஷ்மிகா மந்தானா நேற்று நடந்த ஆனந்த் அம்பானியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

Rashmika
தமிழ் திரையுலகில் இரண்டு திரைப்படங்களில் தான் நடித்திருக்கிறார் என்ற போதும் கூட, கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்புடன் பயணித்து வரும் நடிகை தான் ராஷ்மிகா மந்தானா.
Rashmika Mandanna
இறுதியாக தமிழில் தளபதி விஜயின் "வாரிசு" திரைப்படத்தில் நடித்திருந்த மந்தானா, இப்பொழுது பல மொழிகளில் நல்ல பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஒரு திரைப்படத்திற்கு சுமார் இரண்டு முதல் நான்கு கோடி ரூபாய் அவர் சம்பளமாக பெறுகிறார்.
Actress Rashmika
இந்த நிலையில், நேற்று ஆனந்த் அம்பானியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற ராஷ்மிகா மந்தானா, அணிந்து வந்திருந்த ஆடை பலரது கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. அதன் விலை 1.28 லட்சம் ரூபாய் என்று இப்போது தெரிய வந்துள்ளது.
Rashmika in Anant Wedding
மிக நேர்த்தியான பலவகை வேலைபாடுகளுடன் செய்யப்பட்ட அந்த சேலையானது, கையால் நெய்யப்பட்டது என்று கூறப்படுகிறது. நுணுக்கமான சில கற்களை அதில் பதிந்து, அந்த ஆடை வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.