- Home
- Gallery
- ராஷ்மிகாவுக்கு குட்டி தங்கச்சி வேற இருக்கா..! இருவருக்கும் வயது வித்தியாசம் தெரிஞ்சா நீங்களே ஷாக் ஆகிடுவீங்க
ராஷ்மிகாவுக்கு குட்டி தங்கச்சி வேற இருக்கா..! இருவருக்கும் வயது வித்தியாசம் தெரிஞ்சா நீங்களே ஷாக் ஆகிடுவீங்க
நடிகை ராஷ்மிகா மந்தனாவின் உடன்பிறந்த தங்கை ஷிமன் மந்தனாவின் புகைப்படங்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

rashmika mandanna sister
கர்நாடகாவை சேர்ந்தவரான நடிகை ராஷ்மிகா மந்தனா, கன்னடத்தில் வெளியான கிரிக் பார்ட்டி படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். காந்தாரா படத்தின் நாயகன் ரிஷப் ஷெட்டி தான் அப்படத்தை இயக்கினார். அதில் ரக்ஷித் ஷெட்டிக்கு ஜோடியாக நடித்திருந்தார் ராஷ்மிகா. அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.
rashmika mandanna family
ரக்ஷித் ஷெட்டியுடனான காதலுக்கு குடும்பத்தினரும் ஓகே சொன்னதை அடுத்து சினிமாவுக்குள் நுழைந்த வேகத்தில் ராஷ்மிகாவுக்கு நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்தது. ஒரு கட்டத்தில் திருமணத்தால் தன்னுடைய கெரியர் பாதித்துவிடுமோ என்கிற அச்சத்தில் நிச்சயதார்த்தத்தோடு திருமணத்தை நிறுத்திவிட்டார் ராஷ்மிகா மந்தனா.
rashmika mandanna sister shiman
அதன்பின்னர் கெரியரில் கவனம் செலுத்த தொடங்கிய ராஷ்மிகா, தெலுங்கு திரையுலகில் எண்ட்ரி கொடுத்து அங்கு கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் என வரிசையாக ஹிட் படங்களை கொடுத்து டிரெண்டிங் நாயகியாக உயர்ந்தார். தன்னுடைய கியூட்டான நடிப்பால் இளசுகளை தன்வசம் ஈர்த்த ராஷ்மிகாவுக்கு நேஷனல் கிரஷ் என்கிற பட்டமும் கிடைத்தது.
இதையும் படியுங்கள்... Suriya: அப்போவே அப்படி புலி குட்டியுடன் விளையாடிய சிங்கம்! பலரும் பார்த்திடாத சூர்யாவின் Childhood போட்டோஸ்!
rashmika sister shiman mandanna
தெலுங்கில் கலக்கிய ராஷ்மிகா பின்னர் தமிழ் சினிமாவில் எண்ட்ரி கொடுத்து விஜய்க்கு ஜோடியாக வாரிசு, கார்த்தியுடன் சுல்தான் போன்ற படங்களில் நடித்தார். அடுத்ததாக பாலிவுட்டில் எண்ட்ரி கொடுத்த ராஷ்மிகா அங்கு அனிமல் படம் மூலம் பிரபலமடைந்தார். அதன்பின்னர் தற்போது சல்மான் கான் ஜோடியாக சிக்கந்தர் படத்தில் நடித்து வருகிறார்.
rashmika little sister shiman
இதுதவிர குபேரா என்கிற திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து வரும் ராஷ்மிகா, அல்லு அர்ஜுனுடன் புஷ்பா 2 என்கிற பான் இந்தியா படத்திலும் நடித்து வருகிறார். இப்படி பான் இந்தியா அளவில் செம்ம பிசியான நடிகையாக வலம் வரும் ராஷ்மிகாவின் உடன் பிறந்த சகோதரி பற்றி தற்போது பார்க்கலாம்.
rashmika mandanna sister photos
ராஷ்மிகாவுக்கு ஷிமன் மந்தனா என்கிற தங்கை உள்ளார். அவர்கள் இருவருக்கும் இடையே 17 வயது வித்தியாசம். ராஷ்மிகா பள்ளிப்படிப்பை முடிக்கும் சமயத்தில் தான் அவரது தங்கை ஷிமன் பிறந்துள்ளார். இதனால் அவரை தங்கையாக அல்ல அவருக்கு ஒரு தாயாக இருந்து அவரை கவனித்து வருகிறார் ராஷ்மிகா.
இதையும் படியுங்கள்... தனுஷின் ராயன் படத்துக்கு போட்டியாக ரிலீஸாகும் படங்கள் என்னென்ன? இந்தவார தியேட்டர் & ஓடிடி ரிலீஸ் மூவீஸ் லிஸ்ட்