- Home
- Gallery
- ஒரே ஒரு காரை தயாரிக்க மெனக்கெடும் கார் கம்பெனிகள்.. ஏன்? One-Off கார்கள் பற்றி நீங்க கேள்விப்பட்டதுண்டா?
ஒரே ஒரு காரை தயாரிக்க மெனக்கெடும் கார் கம்பெனிகள்.. ஏன்? One-Off கார்கள் பற்றி நீங்க கேள்விப்பட்டதுண்டா?
One-Off Cars : உலக அளவில் உள்ள பிரபலமான கார் தயாரிப்பு நிறுவனங்கள் பலவும், இந்த One-off கார்களை தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து வருகின்றன.

classic cars
சரி One off கார்கள் என்றால் என்ன?
பொதுவாக ஒரு கார் தயாரிப்பு நிறுவனம், ஒரே மாடலில் பல நூறு கார்களை விற்பனைக்கு தகுந்தார் போல தயாரிப்பதுண்டு. அப்படி, ஒரு மாடல் கார் நல்ல விற்பனையானால், அதில் சில அப்டேட்களை செய்து, அந்த கார்களை அதிக அளவில் விற்பனை செய்வது தான் காலம் காலமாக நடைபெற்று வருகின்றது.
ஆனால் இந்த ஒன்-ஆஃப் கார்கள் என்பது, ஒரு குறிப்பிட்ட வாடிக்கையாளர் அளிக்கும் விருப்பத்திற்கு ஏற்றவாறு, "கஸ்டமைஸ்" செய்து உருவாக்கப்படும் கார்கள் தான் ஒன்-ஆஃப் கார்கள் என்று அழைக்கப்படுகிறது. சுருங்கச்சொன்னால், அந்த ஒரு கஸ்டமருக்காக, வடிவமைப்பு முதல் வண்ணம் வரை எல்லாமே பிரத்தியேகமாக செய்யப்பட்டு, அந்த ஒரே ஒரு கார் மட்டும் உருவாக்கப்படும்.
Hyundai Exter | ஹூண்டாய் எக்ஸ்டர் CNG டூயல்-சிலிண்டர் தொழில்நுட்பத்துடன் அறிமுகம்!
Cugnot Steam Trolley
1769 Cugnot Steam Trolley
கடந்த 1769ம் ஆண்டு, நிக்கோலஸ் ஜோசப் குகனோட் என்பவர் தான் முதல் முதலில் கார்களை தயாரிக்க ஆரம்பித்தார். அவர் தனக்கென்று பிரத்தியேகமாக உருவாக்கிய முதல் கார் தான் இந்த 1769 Cugnot Steam Trolley". அதன்பிறகு இந்த மாடலில் எந்தவிதமான கார்களும் செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
one off cars
காலப்போக்கில் மாறிய ட்ரெண்ட்
காலம் செல்ல செல்ல இந்த ஒன்-ஆஃப் கார் முறை வேறொரு உருவத்தை எடுத்தது. உலகில் உள்ள பெரும் பணக்காரர்கள், தங்களுடைய ஆளுமையை காட்டும் பொருட்டு, தங்களுக்கு என பிரத்தியேகமாக சில வாகனங்களை உருவாக்கிக்கொள்ள தொடங்கினர். Rolls Royce, Bugatti போன்ற பெரிய கார் தயாரிப்பு நிறுவனங்களும் இதற்கு ஒப்புக்கொண்டு, தங்களுடைய வாடிக்கையாளர்கள் கேட்கும் வண்ணம் கார்களை தயாரிக்க தொடங்கினர்.
bugatti la voiture noire
வியக்க வைத்த Bugatti
பிரபல Bugatti நிறுவனம் தான் கடந்த 2019ம் ஆண்டு வரை உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த One-off காரை தயாரித்த நிறுவனமாக திகழ்ந்து வந்தது. "Bugatti La Voiture Noire" என்ற தனது காரை, 2019 ஜெனிவா மோட்டார் ஷோவில் வெளியிட்டது. உலக அளவில் விற்கப்பட்ட மிக விலையுயர்ந்த புதிய கார்களில் ஒன்றாக இது தலைப்புச் செய்திகளில் கூட இடம்பெற்றது. அப்போது அதன் விலை சுமார் 12.5 மில்லின் அமெரிக்க டாலர்கள்.
Rolls Royce boat tail
மாஸ் காட்டிய Rolls Royce.
பொதுவாகவே ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் கார்கள் மிக நுணுக்கமாக உருவாக்கப்பட்டு, பல கோடிகளில் விற்பனையாகும் என்பதை நாம் கேள்விப்பட்டிருப்போம். இந்நிலையில் ஒரு பெரும் பணக்காரர், Yacht என்று அழைக்கப்படும் சிறு ரக கப்பலின் வடிவில், தனக்கு ஒரு கார் செய்ய வேண்டும் என்று விரும்பி, Rolls Royce நிறுவனத்தை அணுகியிருக்கிறார். அவருக்காக கடந்த 2017ம் ஆண்டு அந்நிறுவனம் உருவாக்கியது தான் Rolls Royce Sweptail, அப்போது அதன் விலை சுமார் 12 மில்லியன் அமெரிக்க டாலர்கள்.
அதன் பிறகு கடந்த 2021ம் ஆண்டு, மீண்டும் ஒரு பெரும் பணக்காரர் ஒருவருக்காக Rolls Royce நிறுவனம் உருவாக்கிய Couple Car தான் Rolls Royce Boat Tail. Bugatti நிறுவனத்தை தோற்கடித்து, இப்போது உலகின் மிகவும் விலை உயர்ந்த One off காராக திகழ்வது அது தான். சுமார் 28 மில்லியன் அமெரிக்க டாலருக்கு அது விற்பனையானது. பொதுவாக இதுபோன்ற கார்களை வாங்கும் நபர்களின் தகவல்களை கார் நிறுவனங்கள் வெளியிடுவதில்லை.