பல வருடங்களுக்கு பின் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் ராஜ மாதா ரம்யா கிருஷ்ணன்! எந்த சீரியல் தெரியுமா?
நடிகை ரம்யா கிருஷ்ணன் சுமார் 6 வருடங்களுக்கு பின்னர், மீண்டும் புதிய சீரியல் ஒன்றில் என்ட்ரி கொடுத்துள்ளார். இது குறித்த புரோமோ வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
New Serial
தனியார் தொலைக்காட்சிகள், TRP-யை கைப்பற்ற தொடர்ந்து வித்யாசமான கதையம்சத்துடன் உருவாகும் புதிய சீரியல்களை ஒளிபரப்ப ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
Zee Tamil Serials
அந்த வகையில் சன் டிவி, விஜய் டிவியை, தொடர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியைக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. இதில் ஒளிபரப்பாகும், கார்த்திகை தீபம், அமுதாவும் அன்ன லக்ஷ்மியும், தவமாய் தவமிருந்து போன்ற சீரியல்களுக்கு பல ரசிகர்கள் உள்ளனர்.
Nalathamayandhi
இந்நிலையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அக்டோபர் 9 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ள சீரியல் நளதமயந்தி. இந்த சீரியலில் ரோஜா சீரியல் புகழ் பிரியங்கா நல்காரி ஹீரோயினாக நடிக்க, நந்தா ஹீரோவாக நடிக்க உள்ளார்.
Priyanka Nalkari:
தன்னுடைய அம்மாவின் நினைவாக, பலரது பசியை போக்க உணவகம் நடத்தி வரும் நளதமயந்தி வாழ்க்கையில், வில்லனாக வரும் ஹீரோ எப்படி கணவனாக மாறுகிறார். அவரின் வாழ்க்கையில் அடுத்தடுத்து என்னென்ன சம்பவங்கள் அரங்கேறும் என்பது தான் இந்த சீரியலின் கதைக்களம்.
Serial Promo
இந்த சீரியலின் புரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ள நிலையில், இதில் அம்மன் கெட்டப்பில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார். இவர் கடைசியாக வம்சம் சீரியலில் நடித்திருந்த நிலையில்... இதை தொடர்ந்து, பாகுபலி ஹிட்டுக்கு பின்னர் தொடர்ந்து வெள்ளித்திரையில் மட்டுமே கவனம் செலுத்தினர். சில ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக பங்கேற்றார்.
Promotion
ஆனால் தற்போது மீண்டும் இந்த சீரியலில் நடிக்க வந்துள்ளார். அதே சமயம் ப்ரோமோஷன் வீடியோவில் மட்டுமே நடிப்பாரா? அல்லது சீரியலிலும் அம்மன் கெட்டப்பில் நடிக்க உள்ளாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.