கடும் அப்செட்டில் இயக்குனர் ஷங்கர்..! கோபத்தில் ராம் சரண்.. அப்படி என்ன ஆச்சு? செம்ம ஷாக்கில் படக்குழுவினர்!
இயக்குனர் ஷங்கர் மற்றும் ராம் சரணை உச்சகட்ட அதிர்ச்சியில் ஆழ்த்தும் படியான ஒரு சம்பவம் தான் தற்போது நடந்துள்ளது. அது என்ன என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இயக்குனர் ஷங்கர் ஒரே சமயத்தில் இந்தியன் மற்றும் கேம் சேஞ்சர் ஆகிய இரு படங்களை இயக்கி வரும் நிலையில், இந்த இரு படங்களை பற்றிய முக்கிய தகவல்கள், மற்றும் காட்சிகள் வெளியே கசிந்து விடாமல் பொத்தி பொத்தி பாதுகாத்தும், எப்படியோ 'கேம் சேஞ்சர்' திரைப்படத்தில் 15 கோடி செலவில் எடுக்கப்பட்ட முக்கிய பாடல் ஒன்று ஆன்லைனில் லீக் ஆகி உள்ளது.
இந்த சம்பவம் எப்படி நடந்தது என படக்குழுவினர் அனைவருமே உச்சகட்ட அதிர்ச்சியில் உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக இயக்குனர் ஷங்கர் செம்ம அப்செட்டில் உள்ளதாக கூறப்படுகிறது.
அதே போல் நடிகர் ராம் சரண் படக்குழுவினர் பொறுப்பில்லாமல் நடந்து கொண்டது தான் இந்த பாடல் வெளியாக காரணம் என, கோபத்தில் உள்ளதாக தெலுங்கு மீடியாக்களில் செய்திகள் வெளியாகிவருகிறது.
மிக பிரமாண்டமாக இயக்குனர் ஷங்கர் இயக்கியுள்ள 'கேம் சேஞ்சர்' படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடித்துள்ளார். இந்த பாடல் காட்சிகள் லீக் ஆகியுள்ளதால் அடுத்த கட்ட படப்பிடிப்பில் கூடுதல் பாதுகாப்பு போடவும் படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
கேம் சேஞ்சர் படத்தில், அஞ்சலி, சமுத்திரகனி, எஸ்ஜே சூர்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கார்த்திக் சுப்புராஜ் கதையில் உருவாகி வரும் இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். திருநாவுக்கரசு ஒளிப்பதிவில் சமீர் முகமது படத்தொகுப்பு செய்துள்ளார். இந்த படத்தை பிரமாண்டமாக தயாரித்துள்ளார் தில் ராஜு.