அப்போ அண்ணாத்த.. இப்போ வேட்டையன்.. ரஜினியுடன் 2ம் முறை மோதும் சூர்யா - வெல்லப்போவது யார்?
Rajini Vs Suriya : நடிகர் சூர்யாவின் கனவு திரைப்படமான கங்குவா திரைப்படம் வருகின்ற அக்டோபர் மாதம் 10ம் தேதி சுமார் 38 மொழிகளில் உலக அளவில் வெளியாக உள்ளது.
kanguva
நடிகர் சூர்யாவின் திரை வரலாற்றிலேயே மிகவும் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்படும் முதல் திரைப்படம் தான் "கங்குவா". இதுவரை தமிழ் திரையுலகில் பேசப்படாத முற்றிலும் மாறுபட்ட ஒரு கதைகளத்தை சிறுத்தை சிவா இந்த திரைப்படத்தில் கையாண்டுள்ளார். பிரபல இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் ஏற்கனவே இந்த திரைப்படத்திலிருந்து வெளியான சில பாடல்கள் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருகின்றது.
செம கிராண்டா நடந்த வரலக்ஷ்மி விரதம் - அப்பா அம்மா நண்பிகளோடு கொண்டாடிய அனிதா விஜயகுமார்!
Annaatthe
கடந்த 2021ம் ஆண்டு பிரபலக இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் அண்ணாத்த. அந்த திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு பெரிய அளவில் ஹிட் கொடுக்கவில்லை என்றே கூறலாம், இமான் இசையில் உருவான அந்த திரைப்படம் உலக அளவில் சுமார் 200 கோடி ரூபாய் வசூல் செய்தது.
Jai bhim
அதே 2021ம் ஆண்டு அண்ணாத்த திரைப்படம் வெளியாவதற்கு இரு நாட்களுக்கு முன்பு வெளியான திரைப்படம் தான் ஞானவேலின் "ஜெய் பீம்". மணிகண்டன் மற்றும் சூர்யா நடிப்பில் உலக அளவில் இந்த திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. வசூலில் அண்ணாத்த படத்தை விட சற்று கம்மியாக வசூல் செய்திருந்தாலும் உண்மையில் அப்போது நடந்த ரேசில் ஜெயித்தது சூர்யா தான் என்றே கூறலாம்.
vettaiyan vs jai bhim
இந்நிலையில் அப்படியே நேர்மாறாக சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யாவும், ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் நடித்துள்ள கங்குவா மற்றும் வேட்டையன் ஆகிய இரு திரைப்படங்களும் அக்டோபர் மாதம் 10ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், இந்த ரேஸில் யார் ஜெயிக்கப் போகிறார்கள் என்கின்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ஒவ்வொரு வருடமும் வரலட்சுமி நோம்பை தவறாமல் எடுக்கும் ப்ரீத்தா ஹரி! இந்த வருட போட்டோஸ் வைரல்!