'பல்லு போன நடிகர்' துரைமுருகனின் விமர்சனத்திற்கு ரஜினி என்ன பதில் சொன்னார் தெரியுமா.?
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் திமுக தலைவர் துரைமுருகன் இடையே நடைபெற்ற வார்த்தை மோதல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ரஜினியின் கருத்துக்கு துரைமுருகன் பதிலடி கொடுத்த நிலையில், இந்த விவகாரம் குறித்து ரஜினி தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
ரஜினியின் காமெடி பேச்சு
சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், பள்ளியில் புதிய மாணவர்களை சமாளிப்பது எளிது. ஆனால், பழைய மாணவர்களை சமாளிப்பது கஷ்டம். இங்கே(திமுக) ஏகப்பட்ட பழையவர்கள் இருக்கிறார்கள். இவர்களையெல்லாம் சமாளிப்பது சாதாரண விஷயமல்ல என கூறியிருந்தார். தொடர்ந்து பேசிய அவர். துரைமுருகன் என்று ஒருவர் இருக்கிறார். கலைஞர் கண்ணிலேயே விரல் விட்டு ஆட்டியவர். முக ஸ்டாலின் சார் Hats off too you என பாராட்டி பேசியிருந்தார்.
பல்லு விழுந்த நடிகர்கள்
இதனால் ஆத்திரம் அடைந்த துரைமுருகன், மூத்த நடிகர்கள் எல்லாம் வயசாகி போய், பல்லு விழுந்து போய், தாடி வளர்த்து சாகப்போகின்ற நிலையிலும் நடித்துக் கொண்டிருப்பதால் இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போகின்றது என பதிலடி கொடுத்தார். இந்த பேச்சிற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
வார்த்தை மோதல் தீவிரம்
எப்போதும் தனது மனதில் படுவதை ஜாலியாக பேசக் கூடியவர் தான் ரஜினிகாந்த். அந்த வகையில் தான் இதையும் பேசி இருக்கக் கூடும். இதனை துரைமுருகன் ரசிக்கவில்லையென அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர். துரைமுருகன்- ரஜினி இடையே நடைபெற்ற இந்த வார்த்தை மோதல் தீவிரம் அடைந்தது. சமூக வலைதளத்தில் துரைமுருகனை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
"பல்லு போன நடிகர்களால் இளைஞர்களுக்கு வாய்ப்பு குறையுது" - பதில் தாக்குதல் நடத்திய துரைமுருகன்!
துரைமுருகன் எனது நண்பர்
இந்தநிலையில் துரைமுருகன் கருத்து தொடர்பாக நடிகர் ரஜினி பதில் அளித்த போது, அவர் என்ன சொன்னாலும் எனக்கு வருத்தம் கிடையாது' 'துரைமுருகன் அவர்கள் என்னுடைய நீண்டகால நண்பர், அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும், எங்கள் நட்பு எப்போதுமே தொடரும்' என பதிலளித்தார்.