“வெளிய போடா”னு துரத்திவிட்ட தயாரிப்பாளர்... சும்மா விடுவாரா நம்ம சூப்பர்ஸ்டார்! ரஜினி செய்த தரமான சம்பவம்
தன்னை அவமானப்படுத்திய தயாரிப்பாளர் ஒருவருக்கு நடிகர் ரஜினிகாந்த் தக்க பதிலடி கொடுத்த தரமான பிளாஷ்பேக் சம்பவம் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
rajinikanth
தமிழ் திரையுலகில் சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவருக்கு தற்போது 72 வயதானாலும் இன்றளவும் இளம் நடிகர்களோடு போட்டி போடுவதோடு மட்டுமின்றி நம்பர் 1 இடத்தையும் தக்க வைத்துள்ளார். அண்மையில் ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் படம் கூட மாஸ் ஹிட் அடித்தது. தற்போது தலைவர் 170 படத்தின் படப்பிடிப்புக்காக கேரளா சென்றுள்ளார் ரஜினி. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை த.செ.ஞானவேல் இயக்குகிறார்.
Superstar rajinikanth
இந்நிலையில், தன்னை அவமானப்படுத்திய தயாரிப்பாளர் ஒருவருக்கு ரஜினிகாந்த் கொடுத்த தரமான பதிலடி பற்றி பார்க்கலாம். அதன்படி, சினிமாவில் அறிமுகமான புதிதில், ரஜினி நடித்த 16 வயதினிலே திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் போது தயாரிப்பாளர் ஒருவர், வீட்டுக்கே வந்து தன்னுடைய படத்தில் நடிக்குமாறு கேட்டாராம். இதற்கு ரஜினியும் ஓகே சொல்லிவிட, அந்த தயாரிப்பாளரிடம் ஆயிரம் ரூபார் அட்வான்ஸ் கேட்டிருக்கிறார் சூப்பர்ஸ்டார்.
அதற்கு அவரோ, தற்போது பணம் இல்லை நாளை கொடுத்து அனுப்புகிறேன் என சொல்லிவிட்டு கிளம்பினாராம். பின்னர் மறுநாள் ரஜினி போன் போட்டு அட்வான்ஸ் பற்றி கேட்டபோது, நாளை ஷூட்டிங்கிற்கு வாருங்கள் மேக்கப் போடும் முன் பணம் தருகிறேன் என சொன்னாராம். ரஜினியும் அதை நம்பி மறுநாள் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்றிருக்கிறார். அங்கு மேக்கப் போட வந்தபோது, பணம் கொடுத்தால் தான் மேக்கப் போடுவேன் என சொல்லிவிட்டாராம் ரஜினி.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Rajinikanth Flashback Story
இதையடுத்து அங்கு ஒரு ஒயிட் கலர் அம்பாசிடர் காரில் வேகமாக வந்த தயாரிப்பாளர், ரஜினியை பார்த்து என்னடா பணம் கொடுக்கலேனா மேக்கப் போட மாட்டியா, 4,5 படம் தான் நடிச்சிருக்க அதுக்குள்ள இப்படி திமிரா என திட்டிவிட்டு, உனக்கு இந்த படத்துல சான்ஸ் கிடையாது வெளிய போடானு சொல்லி துரத்திவிட்டாராம். ரஜினி வரும்போது காரில் அழைத்து வந்ததுபோல் இப்பவும் அதே காரில் வந்து டிராப் செய்யுமாறு கேட்க, காரெல்லாம் கொடுக்க முடியாது நடந்து போடா என சொல்லி அவமானப்படுத்தினாராம் அந்த தயாரிப்பாளர்.
Rajini
இதையடுத்து ஏவிஎம் ஸ்டூடியோவில் இருந்து நடந்தே வீட்டுக்கு சென்ற ரஜினி, பின்னர் சினிமாவில் கடினமாக உழைத்து முன்னேறியதும், ஃபாரின் கார் ஒன்றை வாங்கினாராம். அந்த கார் வாங்கிய கையோடு அதற்கு ஒரு ஃபாரின் டிரைவரை போட்டு நேராக காரின் ஸ்டூடியோவுக்கு சென்று, தன்னை அவமானப்படுத்திய தயாரிப்பாளர் எங்கு கார் நிறுத்துவாரோ அதே இடத்தில் காரை நிறுத்திவிட்டு அங்கு ஸ்டைலாக நின்று தம் அடித்தாராம் ரஜினி. அதைப்பார்த்து அந்த தயாரிப்பாளர் வாயடைத்துப் போனாராம். இந்த மாஸ் சம்பவத்தை ரஜினியே ஒரு விழாவில் கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்...விஜய் மேல் அம்புட்டு கோபமா?... லியோ போஸ்டரில் கை வைத்த கலாநிதி மாறன் - கடும் கோபத்தில் தளபதி ரசிகர்கள்