பேரனின் காதுகுத்து விழா... லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்த ரஜினி - தந்தை பெயரையே மகனுக்கு சூட்டிய செளந்தர்யா
கோவையில் நடைபெற்ற தனது பேரனின் காதுகுத்து விழாவில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அவரது குடும்பத்தினர் வந்து கலந்துகொண்டனர்.
soundarya rajinikanth
நடிகர் ரஜினிகாந்துக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் ஐஸ்வர்யா, நடிகர் தனுஷை காதலித்து கடந்த 2004-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு லிங்கா, யாத்ரா என இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனர். சுமார் 18 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த தனுஷ் - ஐஸ்வர்யா ஜோடி கடந்த 2022-ம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்தனர்.
Rajinikanth daughter
அதேபோல் ரஜினியின் இரண்டாவது மகள் செளந்தர்யாவுக்கும் முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்தது. இதையடுத்து விஷாகன் வணங்காமுடி என்பவரை கடந்த 2019-ம் ஆண்டு இரண்டாம் திருமணம் செய்துகொண்டார் செளந்தர்யா. இதையடுத்து கடந்தாண்டு இந்த ஜோடிக்கு ஆண் குழந்தை பிறந்தது.
இதையும் படியுங்கள்... மனைவியின் வளைகாப்பை கோலாகலமாக நடத்திய புகழ்... படையெடுத்து வந்து வாழ்த்திய விஜய் டிவி பிரபலங்கள்
soundarya rajinikanth son
குழந்தை பிறந்த உடனேயே தன் மகனுக்கு வீர் ரஜினிகாந்த் என தன் தந்தையின் பெயரையே வைத்துவிட்டார் செளந்தர்யா. வீர் ரஜினிகாந்த் பிறந்து ஓராண்டு ஆகும் நிலையில், தற்போது அவருக்கு விஷாகனின் குலதெய்வம் கோவிலில் வைத்து மொட்டை போட்டு காதுகுத்து விழா நடத்தி உள்ளனர்.
rajinikanth
கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள செந்தோட்டம் பகுதியில் அமைந்துள்ளது மீனாட்சியம்மன் திருக்கோவில். இதுதான் விஷாகனின் குலதெய்வம் கோவில். இங்கு வைத்து தான் ரஜினியின் பேரன் வீர் ரஜினிகாந்திற்கு மொட்டை போட்டுள்ளனர். இதில் குடும்ப உறவினர்கள் மட்டும் கலந்துகொண்டனர்.
rajinikanth in coimbatore
இந்த நிகழ்ச்சிக்கு லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்த ரஜினிகாந்த், சூலூரில் உள்ள தன்னுடைய சம்பந்தி வீட்டுக்கு சென்று அவர்களுடன் சிறிது நேரம் கலந்துரையாடிவிட்டு, பின்னர் நட்சத்திர விடுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் ரஜினிகாந்த்.
இதையும் படியுங்கள்... பேரழகி உடன் நான்... கீர்த்தி பாண்டியனை கிண்டலடித்தவர்களுக்கு அசோக் செல்வன் கொடுத்த செருப்படி ரிப்ளை