MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • 2 முறை விவாகரத்து! காமெடி நடிகருடன் கிசுகிசு! சிவாஜி, ரஜினி, கமல் என பல ஹீரோக்களுக்கு ஜோடி போட்ட நடிகையா இவர்?

2 முறை விவாகரத்து! காமெடி நடிகருடன் கிசுகிசு! சிவாஜி, ரஜினி, கமல் என பல ஹீரோக்களுக்கு ஜோடி போட்ட நடிகையா இவர்?

தமிழ் சினிமாவில் பல டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமான பிரபல நடிகையின் குழந்தை பருவ புகைப்படங்களை அவரே சமூக வலைத்தளத்தில் வெளியிட, அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. 

2 Min read
manimegalai a
Published : Jun 09 2024, 01:06 PM IST| Updated : Jun 09 2024, 02:22 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Ambika Photos

Ambika Photos

கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டம், கல்லரா கிராமத்தில் நாயர் குடும்பத்தில் பிறந்தவர் தான் பிரபல நடிகை அம்பிகா. இவரின் உண்மையான பெயர் அனிதா நாயர். குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் போது இதே பெயரில் நடித்தாலும், ஹீரோயினாக புரமோட் ஆன பின்னர் தன்னுடைய பெயரை அம்பிகா என மாற்றி கொண்டார்.

27
Ambika Photos

Ambika Photos

1976 ஆம் ஆண்டு 'சோட்டாணிக்கரா அம்மா' என்கிற மலையாள படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. இதை தொடர்ந்து அடுத்தடுத்து சில படங்களில் சைல்ட் ஆர்டிஸ்ட்டாக நடித்த அம்பிகா, இளம் வயதிலேயே கதாநாயகியாக மாறினார். 

Premgi Wedding Photos: காதலியை கரம் பிடித்தார் பிரேம்ஜி! காதலோடு கட்டி அணைத்து முத்தம்! திருமண போட்டோஸ்!

37
Ambika Photos

Ambika Photos

மலையாள மொழியை தாண்டி, தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற தென்னிந்திய மொழிகளிலும் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடி போட்டார்.  குறிப்பாக தமிழில் நடிகை அம்பிகா 1979 ஆம் ஆண்டு, வெளியான 'சக்களத்தி' படத்தின் மூலம் அறிமுகமானார். 

47
Ambika Photos

Ambika Photos

பின்னர் இயக்குனர் கே பாக்யராஜ் இயக்கி நடித்த, அந்த 7 நாட்கள் திரைப்படத்தில் அம்பிகாவின் அழகும், திறமையான நடிப்பும்  திரையுலக ரசிகர்களின் கண்களை கவர்ந்தது. 1984 இல் சுந்தர்ராஜன் இயக்கிய நான் பாடும் பாடல் படத்தில் சிவகுமார், மோகன் மற்றும் பாண்டியன் ஆகியோருடன் முக்கிய வேடங்களில் நடித்தார். பின்னர் சகலகலா வல்லவன், எங்கேயோ கேட்ட குரல், காக்கி சட்டை, வாழ்வே மாயம், படிக்காதவன், மிஸ்டர் பாரத், என ரஜினி, கமல், சிவாஜி கணேசன், விஜயகாந்த் போன்ற பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார்.

Premgi Amaran: 45 வயதில் திருமணம்! காதலியோடு மேக்கப் ரூமிலேயே ரொமான்ஸ் செய்த பிரேம்ஜி..! வைரலாகும் போட்டோஸ்!

57
Ambika Photos

Ambika Photos

முன்னணி நடிகையாக இருக்கும் போதே,  அம்பிகா 1988 இல் பிரேம்குமார் மேனன் என்ற என்.ஆர்.ஐ.யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் அமெரிக்காவில் குடியேறிய இவர் தொடர்ந்து நடிப்பிலும் கவனம் செலுத்தி வந்தார். 

67
Ambika Photos

Ambika Photos

ஆனால் இவர்களின் திருமண வாழ்க்கை, 8 ஆண்டுகளிலேயே முடிவுக்கு வந்தது. இதை தொடர்ந்து தன்னுடைய இரண்டு மகன்களுடன் வசித்து வந்த அம்பிகா,  2000 ஆம் ஆண்டு நடிகர் ரவிகாந்த்தை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமண வாழ்க்கையும் இரண்டே வருடத்தில் விவாகரத்தில் முடிந்த நிலையில், தற்போது மகன்களுடன் தனிமையில் வசித்து வருகிறார். விவாகரத்துக்கு பின்னர் பிரபல காமெடி நடிகர் ஒருவரை இவர் டேட்டிங் செய்து வந்ததாக ஒரு தகவல் தீயாக பரவியதும் குறிப்பிடத்தக்கது.

Divorce: திருமணமான நான்கே வருடத்தில் விவாகரத்தை அறிவித்த பிக்பாஸ் பிரபலம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

77
Ambika Photos

Ambika Photos

அவ்வப்போது ஒரு சில படங்களில் தலை காட்டி வரும் அம்பிகா, சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் நடித்து வந்த அருவி சீரியல் அண்மையில் முடிவடைந்ததை தொடர்ந்து, தற்போது... மல்லி என்கிற புதிய தொடரில் நடித்து வருகிறார். அம்பிகா தன்னுடைய பழைய நினைவுகளை அசைபோடும் விதமாக... சில அரிய புகைப்படங்களை வெளியிட, அவை வைரலாகி வருகின்றன. அப்படி இவர் வெளியிட்ட குழந்தை பருவ புகைப்படங்கள் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.
 

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved