டெஸ்ட் போட்டியை விட மோசமாக விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் – 141 ரன்கள் குவிப்பு!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான 61ஆவது லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

IPL 2024 CSK vs RR 12 May 2024 live
ஐபிஎல் தொடரின் சிஎஸ்கேயின் கடைசி லீக் தற்போது சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றனர். ஐபிஎல் தொடரின் 61ஆவது லீக் போடியான இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங் தேர்வு செய்தார்.
IPL 2024 CSK vs RR 12 May 2024 live
அதன்படி யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஜோஸ் பட்லர் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் இருவருமே ஒவ்வொரு ரன்னாக எடுத்து விளையாடினர். முதல் 6 ஓவர்களில் ராஜஸ்தான் விக்கெட் இழப்பின்றி 42 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்த ஓவரிலேயே ஜெய்ஸ்வால் 24 ரன்களில் ஆட்டமிழக்க, பட்லரும் 21 ரன்களில் ஆட்டமிழந்தார்.
IPL 2024 CSK vs RR 12 May 2024 live
அடுத்து வந்த சஞ்சு சாம்சன் 15 ரன்களில் வெளியேற, ஷுபம் துபே 0 ரன்னில் ஆட்டமிழந்தார். ரியான் பராக் மற்றும் துருவ் ஜூரெல் ஓரளவு நின்று விளையாடி ரன்கள் எடுத்தனர். ஜூரெல் 28 ரன்களில் ஆட்டமிழக்கவே, ரியான் பராக் கடைசி வரை விளையாடி 47 ரன்கள் எடுத்தார். இறுதியாக ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் மட்டுமே எடுத்தது.
IPL 2024 CSK vs RR 12 May 2024 live
பவுலிங்கைப் பொறுத்த வரையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சிமர்ஜீத் சிங் 3 விக்கெட்டும், துஷார் தேஷ்பாண்டே 2 விக்கெட்டும் கைப்பற்றினர். பின்னர் 142 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடி வருகிறது.