ராஜ பார்வை முதல்.. மும்பை எக்ஸ்பிரஸ் வரை.. உலக நாயகனுக்கு அடித்தளமிட்ட இயக்குனர் - யார் அந்த சீனிவாசராவ்?
Happy Birthday Kamalhaasan : பரமக்குடியில் பிறந்து இன்று தமிழ் சினிமாவின் உயிர் நாடியாக, சினிமா என்ற வார்த்தைக்கு அர்த்தமாக மாறி உள்ள மாபெரும் கலைஞன் தான் கமல்ஹாசன். இன்று அவர் தனது 69ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
Pesum Padam
தமிழ் சினிமா உலகில் பல்வேறு சிறந்த திரைப்படங்களை கொடுத்து பலருக்கு முன்மாதிரியாக திகழ்ந்து வருகிறார் உலக நாயகன் கமல்ஹாசன். இந்நிலையில் அன்று தொடங்கி இன்று வரை ஒரு குறிப்பிட்ட இயக்குனர் உலக நாயகன் கமல்ஹாசனின் திரை வாழ்க்கைக்கு அடித்தளமிட்டுள்ளார் என்று கூறினால் அது மிகையல்ல. அவர்தான் சங்கீதா சீனிவாச ராவ், இவர் இயக்கத்தில் முதல் முதலாக கமல் நடித்து வெளியான திரைப்படம் கடந்த 1981 ஆம் ஆண்டு வெளியான ராஜபார்வை என்பது குறிப்பிடத்தக்கது.
அதன் பிறகு 1987 ஆம் ஆண்டு தமிழ் மற்றும் கன்னட மொழியில் வசனங்களே இல்லாமல் வெளியான முதல் திரைப்படமாக உருவானது "புஷ்பக விமானா", தமிழில் இது "பேசும் படம்" என்ற தலைப்பில் வெளியானது அனைவரும் அறிந்ததே. கமலினுடைய திரை வாழ்க்கையில் இந்த இரு திரைப்படங்களும் மிக முக்கியமான திரைப்படங்கள் என்றால் அது மிகையல்ல.
Apoorva Sagothararkal
மேலும் 1989 ஆம் ஆண்டு கமலஹாசன் நடிப்பில் வெளியான "அபூர்வ சகோதரர்கள்" திரைப்படமும் சீனிவாசராவ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான். இன்றளவும் அந்த உயரத்தில் குறைந்த கமல் எப்படி உருவாக்கப்பட்டார் என்பது பலருக்கும் ஆச்சரியத்தை தரும் ஒரு விஷயமாகத்தான் இருந்து வருகிறது.
Michael Madhana Kamarajan
இதனைத் தொடர்ந்து அதற்கு அடுத்த ஆண்டன 1990 ஆம் ஆண்டு வெளியான "மைக்கேல் மதன காமராஜன்" என்கின்ற படத்தை இயக்கி வெளியிட்டதும் சீனிவாச ராவ் தான். இந்த படத்தில் வரும் கிளைமாக்ஸ் காட்சியில், ஒரே பிரேமில் நான்கு கமல்களை உருவாக்கி அசத்தியிருப்பார் சீனிவாச ராவ், உலக நாயகனின் திரை வாழ்க்கையில் இந்த திரைப்படம் மிக மிக முக்கியமான திரைப்படம் என்பது அனைவரும் அறிந்ததே.
Magalir Matum
அதைத்தொடர்ந்து கடந்த 1994 ஆம் ஆண்டு உலகநாயகன் கமல்ஹாசன் தயாரிப்பில் சீனிவாச ராவின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் "மகளிர் மட்டும்" இந்த திரைப்படத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் ஒரு கேமியோ ரோலில் நடித்திருப்பார் படம் முழுக்க அவ்வளவு அழகாக உருவாக்கப்பட்டிருக்கும் இன்றளவும் இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் அதிகம்.
Kadhala Kadhala
1998 ஆம் ஆண்டு பிரபு தேவா மற்றும் உலக நாயகன் நடிப்பில் வெளியான காதலா காதலா என்கின்ற முழு நீள நகைச்சுவை திரைப்படத்தை இயக்கியதும் சீனிவாசரா அவர்கள் தான்.
Mumbai Express
இறுதியாக கடந்த 2005 ஆம் ஆண்டு உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான "மும்பை எக்ஸ்பிரஸ்" திரைப்படத்தை ஹிந்தி மற்றும் தமிழில் இயக்கி வெளியிட்டு இருந்தார் சீனிவாசராவ். வியாபார ரீதியாக இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடையவில்லை என்றாலும் ஒரு எக்ஸ்பிரிமெண்டல் திரைப்படமாக இது அமைந்தது அனைவரும் அறிந்ததே.
கார்த்தி என்னை விழாவுக்கு அழைக்கவில்லை.. சூர்யாவிடம் இருந்து ஒதுங்கிவிட்டேன் - அமீர் கொடுத்த ஷாக்..