குடையில்லாமல் வெளியே போகாதீங்க! அடுத்த 3 மணிநேரத்தில் இந்த 9 மாவட்டங்களில் பிச்சு உதற போகுதாம் மழை!
தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்தில் கோவை, நீலகிரி, திருநெல்வேலி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Tamilnadu Rain
வடமேற்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வலுப்பெற்று கரையை கடந்தது. இந்நிலையில், தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
Chennai Rain
அதேபோல் சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது.
இதையும் படிங்க: ஷாக்கிங் நியூஸ்! இரண்டு மாதங்களுக்கு 144 தடை உத்தரவு! எந்த மாவட்டத்திற்கு? என்ன காரணம் தெரியுமா?
Tamilnadu Rain Alert
இந்நிலையில், தமிழகத்தின் 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி மணிநேரத்தில் (அதாவது காலை 10 மணிவரை) மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. அதன்படி கோயம்புத்தூர், நீலகிரி, புதுக்கோட்டை, திருநெல்வேலி, தூத்துக்குடி, தேனி, தென்காசி, விருதுநகர், கன்னியாகுமரி காலை 10 மணிவரை மழைக்கு வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.