- Home
- Gallery
- ஒரு ஓவர் முடிந்த நிலையில் மீண்டும் மழை – ஓவர்கள் குறைக்கப்பட, போட்டி ரத்து செய்யப்பட வாய்ப்பு!
ஒரு ஓவர் முடிந்த நிலையில் மீண்டும் மழை – ஓவர்கள் குறைக்கப்பட, போட்டி ரத்து செய்யப்பட வாய்ப்பு!
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி ஒரு ஓவர் பேட்டிங் செய்த நிலையில் மழை குறுக்கீடு ஏற்பட்டுள்ளது.

IND vs PAK, T20 World Cup 2024
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முக்கியமான போட்டி தற்போது நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது. இதில் ஏற்கனவே ஈரமான அவுட்பீல்டு காரணமாக டாஸ் தாமதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அரைமணி நேர தாமதத்திற்கு பிறகு டாஸ் போடப்பட்டது. டாஸ் காயினை பேண்ட் பாக்கெட்டிற்குள் போட்ட ரோகித் சர்மா அதனை மறந்து காணாமல் தேடியுள்ளார்.
IND vs PAK, T20 World Cup 2024
இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் பவுலிங் தேர்வு செய்தார். இதையடுத்து மீண்டும் ம்ழை குறுக்கீடு ஏற்பட்டது போட்டி தாமதம் ஏற்பட்டது. கடைசியாக இரவு 8.50 மணிக்கு மீண்டும் போட்டி தொடங்கப்பட்டது. அதன்படி இந்திய அணியில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், ரோகித் சர்மா தான் ரன் கணக்கை தொடங்கினார்.
IND vs PAK, T20 World Cup 2024
பாகிஸ்தான் அணியில் ஷாஹீன் அஃப்ரிடி முதல் ஓவரை வீசினார். அந்த ஓவரில் முதல் பந்தில் 2 ரன்கள் எடுத்த ரோகித் சர்மா 3ஆவது பந்தில் சிக்ஸர் அடித்தார். முதல் ஓவர் முடிவில் இந்திய அணி 8 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கீடு ஏற்பட்டது. இதன் காரணமாக தற்போது போட்டியானது நிறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து விட்டு விட்டு மழை பெய்து வரும் நிலையில் ஓவர்கள் குறைக்கப்பட வாய்ப்பிருக்கிறது. அதோடு தொடர்ந்து மழை நிற்காமல் பெய்தால் போட்டியானது ரத்து செய்யப்படவும் வாய்ப்பிருக்கிறது.
IND vs PAK, T20 World Cup 2024
இந்தியா:
ரோகித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் படேல், ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங்.
IND vs PAK, T20 World Cup 2024
பாகிஸ்தான்:
முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), பாபர் அசாம் (கேப்டன்), உஸ்மான் கான், ஃபகர் ஜான், ஷதாப் கான், இஃப்திகார் அகமது, இமாத் வாசீம், ஷாஹீன் அஃப்ரிடி, ஹரீஷ் ராஃப், நசீம் ஷா, முகமது அமீர்.
IND vs PAK, T20 World Cup 2024
ஒருவேளை மழையின் காரணமாக போட்டியானது ரத்து செய்யப்பட்டால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் பகிர்ந்து அளிக்கப்படும். ஏற்கனவே இந்திய அணி 2 புள்ளிகளுடன் 2ஆவது இடத்தில் இருக்கும் நிலையில் இந்த ஒரு புள்ளியுடன் மொத்தமாக 3 புள்ளிகள் பெற்று 2ஆவது இடத்தில் நீடிக்கும். எஞ்சிய 2 போட்டிகளில் ஏதேனும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றாலும் கூட சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறுவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
IND vs PAK, T20 World Cup 2024
இதற்கு முன்னதாக டி20 உலகக் கோப்பை தொடரில் இரு அணிகளும் 7 போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் இந்திய அணி 6 போட்டியிலும், பாகிஸ்தான் ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டியை பார்ப்பதற்கு இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் நியூயார்க் புறப்பட்டு வந்துள்ளார். இதே போன்று கிறிஸ் கெயில், யுவராஜ் சிங், அஃப்ரிதி ஆகியோர் பலரும் நியூயார்க் வந்துள்ளனர்.