- Home
- Gallery
- அடுத்த 3 மணிநேரத்தில் இந்த 7 மாவட்டங்களில் தரமான சம்பவம் இருக்காம்.. சென்னை வானிலை மையம் அலர்ட்!
அடுத்த 3 மணிநேரத்தில் இந்த 7 மாவட்டங்களில் தரமான சம்பவம் இருக்காம்.. சென்னை வானிலை மையம் அலர்ட்!
தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

South West Monsoon
தென்மேற்கு பருவமழை கேரளா உள்ளிட்ட வடமாநிலங்களில் தொடங்கியுள்ள நிலையில் பல இடங்களில் லேசான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது. அதேபோல், தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பகலில் நல்ல வெயிலும் இரவில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.
Tamilnadu Rain
இந்நிலையில், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்திருந்தது.
இதையும் படிங்க: Magalir Urimai Thogai: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை.. வெளியான குட் நியூஸ்!
Chennai Rain
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35°-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்த பட்ச வெப்பநிலை 28°-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் வானிலை மையம் தெரிவித்திருந்தது.
இதையும் படிங்க: Siruvani Dam: கிடுகிடுவென உயரும் சிறுவாணி அணை; முழு கொள்ளளவை எட்டுமா என எதிர்பார்ப்பு
Tamilnadu Rain Alert
இந்நிலையில் அடுத்த 3 மணிநேரத்தில் அதாவது (காலை 10 மணிவரை) 7 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி ஆகிய 7 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.