Tamilnadu Rain Update: மக்களே உஷார்! அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 6 மாவட்டங்களில் அலறவிடும் போகுதாம் மழை.!
தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்தில் திருவண்ணாமலை, காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Chennai Meteorological Department
தமிழகத்தில் சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
Heavy Rain
அதேபோல் சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்திருந்தது.
இதையும் படிங்க: Power Shutdown in Chennai: சென்னையில் இன்று எந்தெந்த ஏரியாவில் மின்தடை தெரியுமா? மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்!
Villupuram Heavy Rain
அதன்படி நேற்று மாலை மற்றும் இரவு நேரங்களில் பல்வேறு இடங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக 18 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. திண்டிவனம் 7 செ.மீ., வளவனூர் 6 செ.மீ., சூரப்பட்டு, வானூர், செஞ்சியில் தலா 5 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
Tamilnadu Heavy Rain
இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்தில் அதாவது ( காலை 10 மணிவரை) தருமபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது. ஆகையால் வெளியே செல்லும் பொதுமக்கள் குடையில்லாமல் வெளியே செல்ல வேண்டாம்.