சந்திரமுகி 2 ரிலீஸ் தேதி கடைசி நேரத்தில் மாற்றம்... மார்க் ஆண்டனிக்கு பயந்து தள்ளிவைக்கப்பட்டதா? பின்னணி என்ன?
பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி இருக்கும் சந்திரமுகி 2 திரைப்படத்தின் ரிலீஸ் தேதி கடைசி நேரத்தில் அதிரடியாக மாற்றப்பட்டு உள்ளது.
Chandramukhi 2
பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆன திரைப்படம் சந்திரமுகி 2. கடந்த 2005-ம் ஆண்டு திரைக்கு வந்த இப்படத்தில் நயன்தாரா, வடிவேலு, ஜோதிகா, மாளவிகா, நாசர், பிரபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. தற்போது 18 ஆண்டுகளுக்கு பின்னர் அப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்துள்ளனர். சந்திரமுகி 2 என பெயரிட்டிருந்தாலும் வடிவேலுவை தவிர முதல் பாகத்தில் நடித்த நடிகர், நடிகைகள் யாரும் இப்படத்தில் பணியாற்றவில்லை.
kangana ranaut
இருப்பினும் இப்படத்திற்கும் அந்த படத்திற்கும் உள்ள ஒரே ஒரு தொடர்பு வடிவேலு மட்டும் தான். அவரது கேரக்டரை மட்டும் மையமாக வைத்து இந்த இரண்டு கதைக்குமான கனெக்ஷனை கொடுத்துள்ளதாக இயக்குனர் பி வாசு சமீபத்தில் ஆடியோ லாஞ்சில் கூறி இருந்தார். இந்த படத்தில் வேட்டையனாக ராகவா லாரன்ஸ் நடித்துள்ளார். அதேபோல் சந்திரமுகி கேரக்டரில் நடிகை கங்கனா ரனாவத் நடித்திருக்கிறார்.
இதையும் படியுங்கள்... பிக்பாஸில் புது வரவு... அடடே இந்த குக் வித் கோமாளி பிரபலமும் பிக்பாஸ் 7வது சீசனில் கலந்துகொள்ள போகிறாரா?
Chandramukhi 2 postponed
சந்திரமுகி 2 திரைப்படத்தை லைகா நிறுவனம் மிகப்பெரிய பொருட்செலவில் தயாரித்துள்ளது. இப்படத்தில் ஆஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளரான மரகதமணி இசையமைத்துள்ளார். சந்திரமுகி 2 திரைப்படம் வருகிற செப்டம்பர் 15-ந் தேதி ரிலீஸ், விநாயகர் சதுர்த்தி பண்டிகையை ஒட்டி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு, அதற்கான வேலைகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.
chandramukhi 2 new release date
இந்த நிலையில், தற்போது ரிலீசுக்கு ஒரு வாரம் இருக்கும் நிலையில் திடீரென சந்திரமுகி 2 திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அப்படத்தின் விஎப்எக்ஸ் பணிகள் முடிவடையாததால் அப்படத்தின் ரிலீசை தள்ளிவைத்துள்ளார்களாம். வருகிற செப்டம்பர் 28-ந் தேதி இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. சந்திரமுகி 2 படம் விநாயகர் சதுர்த்தி ரேஸில் இருந்து விலகியதால், விஷாலின் மார்க் ஆண்டனி திரைப்படத்திற்கு அதிகளவிலான தியேட்டர்கள் கிடைக்கும் சூழல் உருவாகி உள்ளது.
இதையும் படியுங்கள்... போனில் பேசிய சில நிமிடத்தில் மாரிமுத்து மரணம்! அடுத்த குணசேகரன் யார்? 'எதிர்நீச்சல்' இயக்குனர் திருச்செல்வம்!