அம்பானி மருமகள்னா சும்மாவா.. 2 கோடியில் ஒரு கைப்பை - ராதிகா மெர்ச்சண்டின் காஸ்டலி பேக் கலெக்ஷன்!
Radhika Merchant Bag Collection : பிரபல ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான முகேஷ் அம்பானியின் இளைய மகன் அனந்த் அம்பானிக்கும், பிரபல தொழிலதிபர் வீரேன் மெர்ச்சண்ட் அவர்களுடைய மகள் ராதிகா மெர்ச்சண்ட்டுக்கும் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
Smallest Bag
ராதிகா மெச்செண்ட் அவர்களும் மிகப்பெரிய பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் இவரும் பல ஆடம்பர பொருட்களை பயன்படுத்துவது வழக்கமான ஒன்று. இந்நிலையில் Hermès Morphose நிறுவனத்தின் Mini Bag ஒன்று இப்பொது ராதிகா மெர்ச்சண்ட் அவர்களிடம் உள்ளது. அவர் கையில் குட்டியாக இருக்கும் அந்த பையின் விலை மட்டும் சுமார் 2 கோடியாம்.
மூன்று செமிக்கண்டக்டர் தொழிற்சாலைகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
Radhika Merchant Bag Collection
கடந்த 2023 ஆம் ஆண்டு நடந்த அபு ஜானி மற்றும் சந்திப் கலெக்ஷன் வெளியீட்டு விழாவின்போது ராதிகா தனது சேலையின் நிறத்திற்கு ஏற்ப அந்த கைப்பையை வைத்திருந்தார். இது Hermès Kelly Pink Crocodile Leather Bag ஆகும். இது சுமார் ஒரு கோடியே 60 லட்சம் ரூபாய் என்று கூறப்படுகிறது.
Radhika Merchant
அதேபோல கடந்த 2023 ஆம் ஆண்டு கேட்வே ஆப் இந்தியா நடத்திய தனது வெள்ளை நிற கவுனுடன் பொருந்தக்கூடிய நீல நிற பையுடன் அங்கு வந்திருந்தார் ராதிகா. இது உலக புகழ் பெற்ற The Lady Dior Bag ஆகும். இதன் விலை சுமார் 20 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் என்று கூறப்படுகிறது.
2024 Vs 2024 : இந்தியாவின் நகரப்புற பயணத்தில் மெட்ரோ ரயில் புரட்சியை ஏற்படுத்தியது எப்படி?