- Home
- Gallery
- திருமணத்தில் சகோதரியின் நகைகளை அணிந்திருந்த அம்பானி மருமகள் ராதிகா மெர்ச்சன்ட்.. என்ன காரணம் தெரியுமா?
திருமணத்தில் சகோதரியின் நகைகளை அணிந்திருந்த அம்பானி மருமகள் ராதிகா மெர்ச்சன்ட்.. என்ன காரணம் தெரியுமா?
ஆனந்த் அம்பானியின் மனைவி ராதிகா மெர்ச்சண்ட் திருமணத்தின் போது அணிந்திருந்த நகைகள் குறித்த சுவாரஸ்ய தகவல் வெளியாகி உள்ளது.

Anant Ambani Radhika Merchant Wedding
ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் திருமணம் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட திருமணங்களில் ஒன்றாகும். இந்த ஜோடி நேற்று மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் சென்டரில் திருமணம் செய்து கொண்டனர். பிரம்மாண்ட விழாவில் திருமணம் செய்து கொண்டனர்.
Anant Ambani Radhika Merchant Wedding
இந்தியாவே உற்று நோக்கிய இந்த திருமண விழாவில் ஷாருக்கான், சல்மான் கான் தொடங்கி ரன்வீர் சிங் பெரும்பாலான பாலிவுட் பிரபலங்களும் கலந்து கொண்டனர்.
Anant Ambani Radhika Merchant Wedding
தமிழ் சினிமாவை பொறுத்த வரை நடிகர் ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டார். ஏ ஆர். ரஹ்மான், சூர்யா, ஜோதிகா, விக்னேஷ் சிவன் - நயன்தாரா, அட்லீ பிரியா என பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
Anant Ambani Radhika Merchant Wedding
மேலும் மகேஷ் பாபு, ராம் சரண், ராணா டகுபதி, வெங்கடேஷ் என பல தெலுங்கு நடிகர்களும் கலந்து கொண்டனர். இவர்களை தவிர விளையாட்டு பிரபலங்கள், தொழிலதிபர்கள் ஹாலிவுட் பிரபலங்கள் என பலர் இதில் பங்கேற்றனர்.
Anant Ambani Radhika Merchant Wedding
ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் திருமணத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. மேலும் தனது திருமணத்தில் ராதிகா அணிந்திருந்த லெஹங்கா மற்றும் நகைகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தன.
Anant Ambani Radhika Merchant Wedding
குறிப்பாக ராதிகா மெர்ச்சன்ட் இன்று தனது திருமண விழாவில் தனது சகோதரி அஞ்சலி மெர்ச்சன்ட்டின் நகைகளை அணிந்திருந்தார். தங்கம், வைரம் மற்றும் மரகதத்தால் அலங்கரிக்கப்பட்ட ஆடம்பர நெக்லஸ், காதணிகள், வளையலகள் பல ஆபரணங்களை அணிந்திருந்தனர்.
Anant Ambani Radhika Merchant Wedding
இந்த நகைகள் ராதிகா மெர்சண்ட் குடும்பத்தின் பரம்பரை நகைகள் என்று கூறப்படுகிறது. தலைமுறை தலைமுறையாக இந்த நகைகளையே மெர்சண்ட் குடும்பத்தினர் திருமணத்தின் போது அணிகின்றனர். அந்த வகையில் ராதிகாவும் தற்போது இந்த பாரம்பரிய நகைகளையே அணிந்துள்ளார். ராதிகாவின் சகோதரி அஞ்சலி மெர்ச்சன்ட் தனது திருமணத்தின் போதும் இந்த பாரம்பரிய நகைகளை அணிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.