- Home
- Gallery
- தனுஷின் ராயன் படத்துக்கு போட்டியாக ரிலீஸாகும் படங்கள் என்னென்ன? இந்தவார தியேட்டர் & ஓடிடி ரிலீஸ் மூவீஸ் லிஸ்ட்
தனுஷின் ராயன் படத்துக்கு போட்டியாக ரிலீஸாகும் படங்கள் என்னென்ன? இந்தவார தியேட்டர் & ஓடிடி ரிலீஸ் மூவீஸ் லிஸ்ட்
தனுஷ் நடித்த ராயன் முதல் யோகிபாபுவின் சட்னி சாம்பார் வரை இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடியில் ரிலீஸாகும் படங்களின் பட்டியலை பார்க்கலாம்.

raayan
ராயன்
ஜூலை 26-ந் தேதி தியேட்டரில் பிரம்மாண்டாமாக ரிலீஸ் ஆக உள்ள திரைப்படம் ராயன். நடிகர் தனுஷின் 50வது படமான இதை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. இப்படத்தில் தனுஷ் உடன் காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷான், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, பிரகாஷ் ராஜ், எஸ்.ஜே.சூர்யா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து உள்ளார். இப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளது மட்டுமின்றி தனுஷ் தான் இயக்கியும் உள்ளார்.
Level Cross
லெவல் கிராஸ்
அர்பாஸ் ஆயுப் இயக்கத்தில் அமலா பால் கதையின் நாயகியாக நடித்துள்ள திரைப்படம் லெவல் கிராஸ். இப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்து உள்ளார். மேலும் ஒளிப்பதிவு பணிகளை அப்பு பிரபாகர் மேற்கொண்டுள்ளார். இப்படத்தில் அமலாபால் மருத்துவராக நடித்துள்ளார். திரில்லர் கதையம்சம் கொண்ட படமாக இது உருவாகி உள்ளது. இப்படமும் வருகிற ஜூலை 26-ந் தேதி தனுஷின் ராயன் படத்துக்கு போட்டியாக ரிலீஸ் ஆக உள்ளது.
இதையும் படியுங்கள்... Kanguva : சூர்யா தந்த பர்த்டே ட்ரீட்... சூப்பர் சிங்கர் பிரபலம் பாடிய கங்குவா படத்தின் ஃபயர் சாங் ரிலீஸ் ஆனது
Deadpool and Wolverine
டெட்பூல் & வோல்வரின்
மார்வெல் படங்களுக்கு உலகமெங்கும் ரசிகர்கள் உண்டு. அதிலும் குறிப்பாக டெட்பூல், வோல்வரின் போன்ற கதாபாத்திரங்கள் மார்வெல் படங்களில் தனித்து விளங்கியவை. அவற்றை ஒன்றிணைத்து உருவாகி உள்ள சூப்பர் ஹீரோ படம் தான் டெட்பூல் & வோல்வரின். இப்படமும் வருகிற ஜூலை 26-ந் தேதி தான் உலகமெங்கும் ரிலீஸ் ஆக உள்ளது. தமிழிலும் இப்படம் டப்பாகி வெளியாகிறது. மார்வெல் ரசிகர்கள் இப்படத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
OTT release Movies
ஓடிடி ரிலீஸ் படங்கள்
ராதாமோகன் இயக்கத்தில் யோகிபாபு கதையின் நாயகனாக நடித்துள்ள காமெடி திரைப்படம் தான் சட்னி சாம்பா. இப்படம் நேரடியாக ட்ஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வருகிற ஜூலை 26-ந் தேதி ஸ்ட்ரீம் ஆகிறது. இதுதவிர விமலா ராமன், சோனியா அகர்வால் நடித்துள்ள கிராண்மா திரைப்படமும், காழ் என்கிற திரைப்படமும் ஜூலை 23-ந் தேதி முதல் ஆஹா ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆக உள்ளன. மேலும் கில் என்கிற திரைப்படமும் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் இன்று இரவு ரிலீஸ் ஆகிறது.
இதையும் படியுங்கள்... விஜய் முதல் ஷாருக்கான் வரை... டாப் 10 பான் இந்தியா நடிகர்களும், அவர்களின் வியக்க வைக்கும் சம்பள விவரமும்