MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • ஐபோனை தூக்கி வீசிவிட்டு, செட்டை விட்டு கோபமாக வெளியேறிய புஷ்பா பட இயக்குனர்.. இதுதான் காரணமாம்..

ஐபோனை தூக்கி வீசிவிட்டு, செட்டை விட்டு கோபமாக வெளியேறிய புஷ்பா பட இயக்குனர்.. இதுதான் காரணமாம்..

இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமான புஷ்பா 2 படமாக்குவதில் தாமதம் ஏற்படுவதால் இயக்குனர் சுகுமார் சற்று வருத்தமாக இருப்பதாக கூறப்படுகிறது.

1 Min read
Ramya s
Published : Jun 27 2024, 04:58 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

சினிமாவையே நேசிக்கும் எந்த ஒரு கலைஞரும், தங்கள் படைப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். ஒவ்வொரு காட்சியிலும், படப்பிடிப்பிலும் தங்கள் தனித்துவத்தை காட்ட விரும்புகின்றனர். அப்படி பிரபல இயக்குனர் சுகுமார் விரும்புகிறார். ஆனால் அவர் தற்போது வருத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

26

இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமான புஷ்பா 2 படமாக்குவதில் தாமதம் ஏற்படுவதால் அவர் சற்று வருத்தமாக இருப்பதாக கூறப்படுகிறது. நடிகர்களிடம் இருந்து அவர் தனித்துவமான நடிப்பை எதிர்பார்த்ததாகவும், ஆனால் நடிகர்கள் அதனை முழுமையாக கொடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

36

மேலும் புஷ்பா படத்தின் படப்பிடிப்பின் போது, ஒரு குறிப்பிட்ட காட்சியை மட்டும் 40 முறைக்கு மேல் சுகுமார் ரீ டேக் எடுத்தாராம். ஆனால் அப்போதும் அவர் எதிர்பார்த்த படி, எந்த விஷயமும் நடக்காததால்,  கோபத்தில் அவர் தனது காஸ்ட்லி ஐபோனை தூக்கி போட்டு விட்டு, செட்டை விட்டு வெளியேறியதாகவும் கூறப்படுகிறது.

46

இந்திய சினிமாவில் மிகப்பெரிய வெற்றியை வழங்க சுகுமார் விரும்புவதாகவும், மேலும் படக்குழுவில் உள்ள ஒவ்வொரு உறுப்பினரும் தனக்கு ஒத்துழைக்க அவர் விரும்புவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் சிலர் அதனை செய்யாததால், அவருக்கு  சிறிது கவலையை ஏற்படுத்தியது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

56

புஷ்பா 2 படம் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. ஆனால் ரசிகர்களுக்கு சிறந்த படத்தை வழங்க வேண்டும் என்று சுகுமார் இருக்கிறாராம். எனவே படத்தின் ரிலீஸ் டிசம்பர் வரை தள்ளிப்போயுள்ளதாம்.

 

66

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா, ஃபஹத் பாசில் மற்றும் பலர் நடித்துள்ள 'புஷ்பா 2 தி ரூல்' டிசம்பர் 6ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved