- Home
- Gallery
- Punjab CM married: பதவியில் இருந்தபோது 2 வது திருமணம் செய்து கொண்ட...5 முக்கிய இந்திய அரசியல்வாதிகள் யார்..?
Punjab CM married: பதவியில் இருந்தபோது 2 வது திருமணம் செய்து கொண்ட...5 முக்கிய இந்திய அரசியல்வாதிகள் யார்..?
Punjab CM Bhagwant Mann gets married: பதவியில் இருந்தபோது 2வது திருமணம் செய்து கொண்ட, 5 முக்கிய இந்திய அரசியல்வாதிகள் யாரெல்லாம் என்பது தற்போது இணையத்தில் பேசு பொருளாகி உள்ளது.

Punjab CM Bhagwant Mann gets married:
பஞ்சாப் முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் (ஏஏபி) தலைவருமான பகவந்த் மான் தனது 48 வயதில் 32 வயது நிறைந்த டாக்டர் குர்ப்ரீத் கவுர் என்பவரை, 2வது முறையாக திருமணம் செய்து கொள்கிறார். குர்ப்ரீத் கவுரின் தந்தை விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்.
இவர்களின் திருமணம் சண்டிகரில் உள்ள பகவந்த் மானின் வீட்டில் வைத்து எளிமையான முறையில் நடைபெறுகிறது. காமெடி நடிகரான இருந்து பின்னர், அரசியலில் அடி எடுத்து வைத்த பகவந்த் மான்-குர்ப்ரீத் கவுர் பஞ்சாப் மாநில முதல்வராக பொறுப்பு வகித்து வருகிறார். இவர்களது, திருமணத்தில் தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி எம்பி ராகவ் சத்தா உள்ளிட்ட சிலர் மட்டுமே பங்கேற்க இருக்கிறார்கள்.
Punjab CM Bhagwant Mann gets married:
இவர், கடந்த 2015-ல் தனது முதல் மனைவியிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து கொண்டனர். தற்போது அவரது முன்னாள் மனைவி இந்தர்பிரீத் கவுர் மற்றும் அவர்களது குழந்தைகள் அமெரிக்காவில் வசிக்கின்றனர் என்பது குறிப்பிடதக்கது.
அரசியலில் முக்கிய பதவிகளில் இருக்கும் போது திருமணம் செய்து கொள்ளும் அரசியல்வாதிகளில் இவர் முதன்மையானவர் அல்ல. முன்னதாக பதவியில் இருந்தபோது 2வது திருமணம் செய்து கொண்ட... 5 முக்கிய இந்திய அரசியல்வாதிகள் யார்..? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
HD Kumaraswamy
முதல்வராக இருந்த குமாரசாமி:
2006 முதல் 2007 வரை கர்நாடக முதல்வராக இருந்தவர் குமாரசாமி. முதல் முறையாக 1986ல் திருமணம் செய்து கொண்டார், 2006ல் முதல்வராக இருந்த காலத்தில் கன்னட நடிகை ராதிகாவை திருமணம் செய்து கொண்டார். பின்னர், கடந்த 2010-ம் ஆண்டு குமாரசாமியை ரகசிய திருமணம் செய்து கொண்டதை ராதிகா வெளி உலகிற்கு தெரியப்படுத்தினர்.
Prafulla Kumar Mahan
பிரபுல்ல குமார் மஹந்தா:
1985 டிசம்பரில் அசாமின் முதலமைச்சரான மஹந்தா 1990 வரை பதவியில் இருந்தார். 1988 ஆம் ஆண்டு முதல்வர் பதவியில் இருந்த போது ஜெயஸ்ரீ கோஸ்வாமி மஹந்தாவை 2 வது முறையாக மணந்தார். அவர் அரசியல்வாதியாக மட்டுமில்லாமல், ஒரு எழுத்தாளராகவும் பின்னர் 1999 மற்றும் 2001 க்கு இடையில் ராஜ்யசபாவில் அசாமின் பிரதிநிதியாகவும் இருந்தார்.
Babul Supriyo
பாபுல் சுப்ரியோ:
பாபுல் சுப்ரியோ 2019 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அரசாங்கத்தில் அமைச்சராக பணியாற்றிய போது விமானப் பணிப்பெண் ரச்சனா சர்மாவை 2- வது முறையாக மணந்தார்.அவர் மும்பையிலிருந்து கொல்கத்தா செல்லும் விமானத்தில் ரச்சனாவை முதலில் சந்தித்ததாக கூறப்படுகிறது. இவர், 2015 இல் அவர் தனது முதல் மனைவியிடமிருந்து கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றவர் என்பது குறிப்பிடக்கத்தக்கது.
Virbhadra singh
வீரபத்ர சிங்:
1962, 1967 மற்றும் 1971 ஆம் ஆண்டுகளில் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர், 1983 முதல் 1990 வரை வீரபத்ரா இமாச்சல பிரதேசத்தின் முதல்வராக பணியாற்றினார். இவர், கடந்த 1985 காலகட்டத்தில் அவர் மண்டியின் மக்களவை எம்பியாக இருக்கும் பிரதிபா சிங்கை இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொண்டார்.
Chander Mohan
சந்தர் மோகன்:
2008 ஆம் ஆண்டு ஹரியானாவின் முன்னாள் துணை முதல்வர் பதவியில் இருந்தபோது தனது காதலி அனுராதா பாலி என்பவரை இரண்டாவது முறை திருமணம் செய்து கொள்வதற்காக மதம் மாறினார்.
இதையடுத்து, தம்பதியினர் தங்களை சந்த் முகமது மற்றும் ஃபிசா என்று பெயர் மாற்றிக் கொண்டனர். மதம் மாறி இரண்டாவது திருமணம் செய்த இந்த முழு சம்பவத்துக்குப் பிறகு, சந்திரமோகனின் அரசியல் வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.